ஈரோடு மாவட்டத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலம் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் செப்டம்பர் 15ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
காலிப்பணியிடங்கள் விவரம்:
பதவி: தகவல் தொழில்நுட்ப பணியாளர்
அங்கீகரிக்கபட்ட பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் அல்லது கணினிப் பொறியியலில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
கணினி படிப்பில் முதுகலை பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
அனுபவம்: குறைந்தது 3 ஆண்டுகள் அரசு, அரசு அல்லாத திட்டங்கள் அல்லது திட்டங்களுடன் அமைக்கப்பட்ட நிர்வாக அமைப்பில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பான, பணி அனுபவம் உள்ளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
பெண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பதாரர்கள் ஈரோடு மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
ஊதியம்: ரூ. 18,000/-
பதவி – வழக்குப் பணியாளர் (Case Worker);
சமூகப் பணியில் இளங்கலை பட்டம் (Bachelor’s Degree in Social Work) பெற்றிருக்க வேண்டும்.
உளவியல் ஆலோசகர்(Counselling Psychology) (அல்லது) மேலாண்மை வளர்ச்சியில் (Development Management) பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வகையில் அரசு மற்றும் அரசு சாராத திட்டங்கள் அல்லது திட்டங்களுடன் அமைக்கப்பட்ட ஒரு நிர்வாகத்தில் 1 வருட முன் அனுபவம் உடையவராகவும்,
உளவியல் ஆலோசனையில் ஒரு நிறுவனத்திலோ அல்லது வெளிப் பணிகளிலோ குறைந்த பட்சம் 1 வருட அனுவபம் உடையவராகவும் இருக்க வேண்டும்.
வயது 35க்குள் இருக்க வேண்டும். உள்ளூரைச் சார்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். வாகனம் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். மாத ஊதியம் ரூ.15,000/ஆகும்.
இதையும் வாசிக்க: மத்திய அரசு வேலை.. ரூ.95,000 வரை சம்பளம்.. உடனே விண்ணப்பியுங்கள்
பதவி: பன்முக உதவியாளர் (Multi Purpose Helper)
8ம் வகுப்பு தேர்ச்சி அல்லது 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும். ஏதாவது அலுவலகத்தில் பணிபுரிந்த அனுபவம் உடையவராக இருக்க வேண்டும். உள்ளூரைச் சார்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ.6,400/- ஆகும்.
விண்ணப்பம் செய்வது எப்படி?
விண்ணப்பங்கள் பூர்த்திசெய்யப்பட்ட தொடர்புடைய இணைப்புகள்/ஆவணங்களுடன் முறையாகச் சான்றொப்பமிடப்பட்டு செப்டம்பர் 15 அன்று மாலை 5.00 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் . விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி, மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், மாவட்ட ஆட்சியரகம், 6வது தளம், ஈரோடு – 638 011 ஆகும் . மேற்கண்ட தேதிக்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் சுருக்கமாக நிராகரிக்கப்படும். விண்ணப்பத்துடன் அசல் சான்றிதழ்களை அனுப்பக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
நன்றி
Publisher: tamil.news18.com
