பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் மூலம் 232 துணை மேலாளர் பொறியியலாளர் (Probationary Engineer), துணை மேலாளர் அலுவலர் Probationary Officer (HR), துணை மேலாளர் கணக்கு அலுவலர் ( Probationary Accounts Officer) காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான ஆள்சேர்க்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
துணை மேலாளர் பொறியியலாளர் (Probationary Engineer):
காலியிடம்: 205
கல்வி தகுதி: எலெக்ட்ரானிக்ஸ் & தகவல் தொடர்புதுறை/ தொலைத்தொடர்பு/ எலக்ட்ரானிக்ஸ் & தொலைத்தொடர்பு / தொலைத்தொடர்பு / இயந்திரவியல் / கணினி அறிவியல் / கணினியிய பொறியியல் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் பிஇ, பிடெக், பிஎஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 01.09.2023 அன்று 25-க்கு கீழ் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும்.
துணை மேலாளர் அலுவலர்(Probationary Officer):
காலியிடங்கள்: 12
கல்வித் தகுதி: மனித வளம் தொடர்பான பாடங்களில் MBA/MSW/PG Degree பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 01.09.2023 அன்று 25-க்கு கீழ் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும்
துணை மேலாளர் கணக்கு அலுவலர் ( Probationary Accounts Officer) :
காலியிடம்: 15
கல்வித் தகுதி: பட்டய கணக்காளர் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 01.09.2023 அன்று30-க்கு கீழ் இருக்க வேண்டும்.இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும்.
நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடைவராவர்.
இதையும் வாசிக்க: ₹58,000 வரை சம்பளம்… எந்த தேர்வும் இல்லை… பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கும் அரசு வேலை!
விண்ணப்பக் கட்டணம்: இதற்கான, விண்ணப்பக் கட்டணம் ரூ.1180ஆகும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்க கட்டணமாக செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆகவே, பொதுப் பிரிவு மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ரூ.1180 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
தெரிவு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல் ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் நேர்காணல் தேர்வுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களின் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்.
விண்ணப்பம் செய்வது எப்படி?
ஆன்லைன் மூலமாக 28.10.2023 இரவு மணி 11.59 வரை விண்ணப்பங்களை அனுப்பலாம். விண்ணப்பங்கள் மற்றும் இதர விவரங்களை அறிவதற்கான இணையதளம் bel-india.in ஆகும். ஆள்சேர்க்கை அறிக்கையை இந்த இணைப்பில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
நன்றி
Publisher: tamil.news18.com