முதலீடு செய்தால் நல்ல லாபம், காதலில் வெற்றி..!! இந்த 5 ராசிக்காரர்களுக்கும் இனி யோகம் தான்..!!

முதலீடு செய்தால் நல்ல லாபம், காதலில் வெற்றி..!! இந்த 5 ராசிக்காரர்களுக்கும் இனி யோகம் தான்..!!

அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஏற்படக்கூடிய கிரக பெயர்ச்சிகள், இந்தாண்டு நவராத்திரியுடன் இணைந்து நடக்கிறது. எந்த ஆண்டிலும் இல்லாத அளவுக்கு, இந்தாண்டு நடக்கும் கிரகப்பெயர்ச்சி மிகவும் தனித்துவமானதாக இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம், ஒரு சில ராசிகளுக்கு, கும்ப சனியால் ஏற்பட்டுள்ள யோகங்கள் தான்.

ஒவ்வொரு ராசியிலும் சனி இரண்டரை முதல் 3 ஆண்டு காலம் வரை இருக்கும். இந்தாண்டு கும்பத்தில் ஆட்சியாக சஞ்சரித்து வருகிறார். எந்த ஒரு கிரகம் ஒரு ராசியில் உச்சம் பெற்றோ அல்லது ஆட்சியாகவோ இருக்கும்போது, அது ஒரு சில ராசிகளுக்கு சிறப்பான யோகத்தை கொடுக்கும். அந்த வகையில் சனி, கும்பத்தில் சச யோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இது ரிஷப ராசி, கடக ராசி, துலாம் ராசி, மகர ராசி மற்றும் கும்ப ராசி ஆகிய 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தையும் யோகங்களையும் வாரி வழங்குகிறது. அதேபோல், இப்பொழுது துலாம் ராசியில் சூரியனும் புதனும் சஞ்சரிக்கிறது. இந்த இணைவு புத ஆதித்ய யோகத்தை ஏற்படுத்துகிறது. புத ஆதித்ய யோகம் மற்றும் சசி யோகம் இரண்டுமே, 5 ராசிகளின் வாழ்க்கையே மாற்ற உள்ளது.

ரிஷப ராசி : இந்த கிரக யோகங்களால் ஏகப்பட்ட நன்மைகளைப் பெறுவார்கள். இதை தவிர்த்து இவர்களுடைய காதல் வாழ்க்கை சிறப்பாக அமையும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பணம் உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கடக ராசி : இந்த காலகட்டத்தில் வணிகங்களில் முதலீடு செய்வதன் மூலமாக மிக நல்ல லாபத்தை பெறலாம். சொத்து வாங்குவது, விற்பனை செய்வது ஆகியவை சாதகமாக இருக்கிறது. பொருளாதார நிலை மற்றும் செல்வ வளம் அதிகரிக்கும். அலுவலகம் மற்றும் வேலை என்று அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.

துலாம் ராசி : வணிகர்களுக்கு மிக மிக யோகமான காலமாக அமைந்துள்ளது. மிகப் பெரிய அளவு லாபம் பெறும் அமைப்பு இருக்கிறது. வணிகத்தில் இருந்த சிக்கல்களும் நீங்கி விடும். மேலும், குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும். வாழ்க்கைத் துணையிடமிருந்து நீங்கள் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும்.

மகர ராசி : மகர ராசியினருக்கு இந்த நவராத்திரியில் வாழ்க்கையில் எல்லாவிதங்களிலும் வளர்வதற்கான புதிய வாய்ப்புகள் தேடி வரும். வேலை மாற்றம் விரும்புபவர்களுக்கு இது சரியான நேரம். நீங்கள் எதிர்பார்த்து காத்திருந்த வேலை கிடைக்கும். பொருளாதார ரீதியாக வலிமை அடைவீர்கள். உங்களுக்கு வரவேண்டிய தொகை நீண்டகாலம் வராமல் இருந்தால் அதுவும் உங்களுக்கு கிடைக்கும்.

கும்ப ராசி : கும்ப ராசியினருக்கு வாழ்க்கை மகிழ்ச்சியாக மாறும். இதுநாள் வரை நீங்கள் உணர்ந்து வந்த ஒரு குழப்பமான மனநிலை உங்களை விட்டு நீங்கும். வணிகம் செய்பவர்கள் நல்ல லாபம் பெறுவார்கள். அலுவலகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும்.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: 1newsnation.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *