அரசு கலை அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பாளி டேசனிக் கல்லூரிகளில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. அதன்படி, அரசு கலை, அறிவியல் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களுக்கான மாத மதிப்பூதியம் ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் ஒப்பந்த அடிப்படையிலான தற்காலிக ஆசிரியர்களுக்கான ஊதியம் ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் அரசு பொறியியல் கல்லூரி தற்காலிக ஆசிரியர்களுக்கான ஊதியம் ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: 1newsnation.com
நன்றி
Publisher: 1newsnation.com