கடந்த சில நாட்களாக விலை குறைந்து விற்பனையான தங்கம், இன்று சவரனுக்கு ரூ.120 உயர்ந்து, 45,720 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இது நகைப்பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, கடந்த சில நாட்களாக இறங்குமுகமாக இருந்த தங்கத்தின் விலை, இன்று சவரனுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது.
தங்கம் நேற்று ஒரு கிராம் 5,700 ரூபாய்க்கும், ஒரு சவரன் 45,600 ரூபாய்க்கும் விற்பனையான நிலையில், இன்று தங்கத்தின் விலை மேலும் உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 5,715 ரூபாயாகவும், சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 45,720 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே சமயம் 24 கேரட் சுத்த தங்கம், கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து, 6,185 ரூபாய்க்கும், சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து, 49,480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையில் இன்று 1 ரூபாய் உயர்ந்து 78 ரூபாயாகவும், ஒரு கிலோ வெள்ளி 78,000 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
நன்றி
Publisher: 1newsnation.com