இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (IIT Bombay) பாலஸ்தீனத்தின் தற்போதைய நிலை குறித்து, மனிதபண்பியல் மற்றும் சமூக அறிவியல் துறையைச் சேர்ந்த பேராசிரியர் ஷர்மிஸ்தா சாஹா, நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்த சுதன்வ தேஷ்பாண்டே என்பவர், `இஸ்ரேலுக்கு எதிரான பாலஸ்தீன சுதந்திரப் போராட்டம்” குறித்துப் பேசினார். இந்தப் பேச்சை IIT-யில் முனைவர் பட்டம் பயிலும் ஓம்கார் சுபேகர் என்ற மாணவர், தனது கைபேசியில் பதிவுசெய்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டிருக்கிறார்.
அதைத் தொடர்ந்து, தீவிரவாதத்தை உயர்த்திப் பேசுவதாக, வலதுசாரி மாணவர்கள் IIT வளாகத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டம் செய்தனர். சிறப்பு விருந்தினர் சுதன்வ தேஷ்பாண்டே, நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த பேராசிரியர் ஷர்மிஸ்தா சாஹா ஆகியோரைக் கைதுசெய்ய வேண்டும் என, அவர்களின் பெயர்களை முழங்கியும், புகைப்படம் மற்றும் பதாகைகளை ஏந்தியவாரும் கோஷங்களை எழுப்பினர்.
இந்த நிலையில், இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT Bombay) அரசியல் சார்புடைய பேச்சுகள், ஒரு கொள்கை சார்ந்த நபர்களை அழைத்து நடத்தப்பெறும் கருத்தரங்குகள் தொடர்பாகவும், அவற்றில் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொள்வது தொடர்பாகவும் புதிய கட்டுப்பாடுகளையும், விதிகளையும் வகுத்திருக்கிறது.
நன்றி
Publisher: www.vikatan.com
