`கோமூத்திர மாநிலங்கள்' : திமுக எம்பி-யின் சர்ச்சைப்

அதைத்தொடர்ந்து, தி.மு.க அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்களும் செந்தில்குமாரின் பேச்சுக்கு கடுமையாக எதிர்வினையாற்றினர். குறிப்பாக காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம், “இது மிகவும் அவமரியாதையான வார்த்தை. அவர், உடனடியாக மன்னிப்பு கேட்கவேண்டும். அவர் பேசிய கருத்துக்களை திரும்பப் பெற வேண்டும்!” என்றார். அதேபோல மற்றொரு காங்கிரஸ் எம்.பியான ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, “நாடாளுமன்றத்தில் அவர் பேசியதற்கும், எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அது அவரது சொந்தக் கருத்து” என்று விலகிக்கொண்டார். மேலும், காங்கிரஸ் எம்.பி ராஜீவ் சுக்லாவும், “திமுக-வின் அரசியல் வேறு. காங்கிரஸின் அரசியல் வேறு. இந்த அரசியலில் காங்கிரஸுக்கு உடன்பாடு கிடையாது. காங்கிரஸ் கட்சி, சனாதன தர்மத்தையும், கோமாதாவையும் நம்புகிறது. நாங்களும் நம்புகிறோம். அனைத்து மதத்தினரையும் இணைத்து முன்னேறுவோம்” எனத் தெரிவித்தார். அதேநேரம் ம.தி.மு.க பொதுச்செயலாளரும், எம்பியுமான வைகோ, “அவர் சொல்வது சரிதான், அவர் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்” எனக்கூறி ஆதரவு தெரிவித்திருக்கிறார்.

I.N.D.I.A கூட்டணிI.N.D.I.A கூட்டணி

I.N.D.I.A கூட்டணி

இந்த நிலையில், பா.ஜ.கவினர் இந்த விவகாரத்தை பெரும் விவாதப் பொருளாக கொண்டுசென்று, காங்கிரஸ்-திமுகவுக்கு எதிரான பிரசாரத்தைக் கையாண்டனர். இதையடுத்து தி.மு.க அமைப்புச் செயலாளரான ஆர்.எஸ்.பாரதி, “தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார், தவறான பொருள் கொள்ளத்தக்க சொல் ஒன்றைப் பயன்படுத்தியிருந்தார். இதை அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், செந்தில்குமாரைக் கடுமையாகக் கண்டித்தார்கள். பொதுவெளியில் கருத்துகளைச் சொல்லும்போது நாகரிகத்தையும் பண்பாட்டையும் காக்கும் வகையில், அனைவரும் நடந்துகொள்ள வேண்டும். அகில இந்தியப் பிரச்னைகள் பற்றிக் கருத்துச் சொல்லும்போது, தனிப்பட்ட முறையில் கருத்துகளைச் சொல்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்!” என வேண்டுகோள் விடுத்தார்.

ஆர்.எஸ்.பாரதிஆர்.எஸ்.பாரதி

ஆர்.எஸ்.பாரதி

அதேபோல தருமபுரி எம்.பி. செந்தில்குமார் தனது எக்ஸ் தளத்தில் “நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்துக் கூறிய நான், தவறான பொருள் அளிக்கும் வகையில் ஒரு சொல்லைப் பயன்படுத்தி விட்டேன். எந்த உள்நோக்கத்துடனும் அந்த சொல்லை பயன்படுத்தவில்லை. அது தவறான பொருள் தருவது என்பதால் வெளிப்படையாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்!” என மன்னிப்பு கேட்டார். மேலும், இன்று நடந்த நாடாளுமன்றக் கூட்டத்திலும் வெளிப்படையாக மன்னிப்பு கேட்டு சர்ச்சையை முடித்துவைத்தார். ஆனால், தி.மு.க அமைச்சர் உதயநிதியின் `சனாதன ஒழிப்பு’ பேச்சு போலவே, எம்.பி. செந்தில்குமாரின் `கோமூத்திர மாநிலங்கள்’ பேச்சையும் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து பா.ஜ.கவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஏற்கெனவே உதயநிதியின் சனாதன பேச்சுதான் ஐந்து மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடவை ஏற்படுத்தின என்று பலரும் விமர்சித்துக்கொண்டிருக்கும் நிலையில், இப்போதைய செந்தில்குமாரின் பேச்சையும் கன்டென்டாக எடுத்து காங்கிரஸ்-இந்தியா கூட்டணிக்கு எதிரான ஆயுதமாக எடுத்திருக்கிறது பா.ஜ.க. அதற்கேற்றபடி, `தி.மு.கவும் நாங்களும் வேறு வேறு, அவர்கள் கருத்தும் எங்கள் கருத்தும் ஒன்றல்ல’ என தொடர்ந்து பின் வாங்கி வருகிறது காங்கிரஸ்.

மேலும், திமுக மாநில அரசியலில் வரவேற்பை பெறும் விஷயங்களை பேசும்போது, அது தேசிய அளவில் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு பின்னடைவாக போகிறது எனவும் கூட்டணியில் வலுவான கட்சியாக உள்ள திமுக-வின் கருத்துக்களை எதிர்க்கவும் முடியாமல், ஏற்கவும் முடியாமல் உள்ளதை பாஜகவினர் பயன்படுத்துக்கொள்கிறார்கள் எனவும் காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் வேதனை தெரிவிக்கிறார்கள்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *