சனாதனம்: "குலத்தொழில் வழியிலே பதவிக்கு வந்த உதயநிதிக்கு

விழுப்புரம் அ.தி.மு.க மாவட்டக் கட்சி அலுவலகத்தில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பலர், மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் முன்னிலையில் இன்று அ.தி.மு.க-வில் இணைந்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சி.வி.சண்முகம், “சனாதனத்தை எதிர்க்கிறோம் என்று இன்றைக்குச் சொல்லிக் கொண்டிருக்கின்ற உதயநிதி, எப்படி இந்த பதிவுக்கு வந்தார்? 

சி.வி.சண்முகம் - விழுப்புரம்சி.வி.சண்முகம் - விழுப்புரம்

சி.வி.சண்முகம் – விழுப்புரம்

சனாதன தர்மத்திலே சொல்லப்படுகின்ற, அவர்கள் எதிர்கின்ற ஒரு விஷயம் “குலத்தொழில்’. இன்றைக்கு தி.மு.க-வின் குலத்தொழிலாக… தாத்தா, அப்பா, அவரின் பிள்ளை என குலத்தொழில் வழியிலே இன்று பதவிக்கு வந்திருக்கின்ற உதயநிதி ஸ்டாலினுக்கு, இதைப் பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும், தகுதியும் கிடையாது. தி.மு.க-வே ஒரு டெங்கு. தி.மு.க அழிந்தால்தான் தமிழ்நாட்டில் டெங்குவே ஒழியும்” என்றார் காட்டமாக.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *