நாடாளுமன்றப் போராட்டம்: திருச்சி சிவா காட்டம்:
இந்த நிலையில், நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் 143 எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி-க்களை சஸ்பெண்ட் செய்ததைக் கண்டித்து நடைபெற்றுவரும் போராட்டத்தின்போது, பத்திரிகையாளர்களை சந்தித்த தி.மு.க எம்.பி திருச்சி சிவா, “ஒரு மாநில அரசு இடர்பாடுகளில் இருக்கும்போது, உதவிக்கரம் நீட்ட வேண்டிய கடமை மத்திய அரசுக்கு இருக்கிறது. அதுதான் கூட்டாட்சித் தத்துவத்தின் கோட்பாடு. ஆனால், மத்திய அரசு தங்களின் எதிர்க்கட்சிகள் ஆளுகின்ற மாநிலங்களையெல்லாம் வஞ்சிக்கிறது. மக்கள் வாடி நிற்கும், தேவைகளால் தடுமாறி நிற்கும் இது போன்ற காலகட்டத்தில், மாநில அரசு முனைப்பாக செயல்படும்போது, அதற்கு உதவி செய்யாமலும், உறுதுணையாக இல்லாமலும் மத்திய அரசு பாரபட்சத்துடன் நடந்துகொள்கிறது.

எங்கள் மாநிலம் இவ்வளவு மோசமான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும்போது, தமிழ்நாடு அரசு கோரிய நிதியிலிருந்து ஒருபகுதியைக்கூட மத்திய அரசு கொடுக்காமல், தேசிய பேரிடர் மீட்பு நிதியிலிருந்து நியாயமாக கொடுக்கக்கூடிய பங்கு ரூ.492 கோடியை மட்டுமே கொடுத்திருக்கின்றனர். ஆனால், அதேநேரம் குஜராத்துக்கு ஏதாவது பாதிப்பு என்றால், ரூ.1,000 கோடிகூட கொடுக்கிறார்கள். மத்திய அரசு ஏன் ஓரவஞ்சனையுடன் செயல்படுகிறது… தமிழ்நாடு அரசு எவ்வளவு முயற்சிகளை மேற்கொண்டாலும், நிவாரணத்துக்கு கொடுக்க வேண்டிய தொகையை மத்திய அரசு இதுவரையில் தரவில்லை!” என காட்டமாக விமர்சித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
