உத்தரப்பிரதேச மாநிலம், முசாபர் நகர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் பள்ளியொன்றில் பணியாற்றிவரும் ஆசிரியை த்ரிப்தா தியாகி என்பவர், பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் முஸ்லிம் மாணவன் ஒருவனை, மற்ற மாணவர்களிடம் சொல்லி அடிக்க வைத்ததாகவும், மாணவனின் மதத்தை விமர்சித்துப் பேசியதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு, அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சம்பந்தப்பட்ட ஆசிரியைமீது முசாபர் நகர் காவல்துறை, சித்ரவதைக்குள்ளான மாணவனின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவுகள் 323 (தன்னிச்சையாகக் காயப்படுத்துதல்), 504 (அமைதியை மீறும் நோக்கத்துடன் வேண்டுமென்றே அவமதிப்பு) ஆகியவற்றின்கீழ் வழக்கு பதிவுசெய்திருக்கிறது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணையின்போது, ஆசிரியை த்ரிப்தா தியாகி தரப்பில், “பதற்றத்தைத் தூண்டும் வகையில் காணொளி எடுக்கப்பட்டுச் சித்திரிக்கப்பட்டிருக்கிறது” எனக் கூறப்பட்டிருக்கிறது.
மேலும், இந்த வழக்கு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய த்ரிப்தா தியாகி, “நான் மாற்றுத்திறனாளி, அதனால், மாணவர்களை அடிக்கச் சொன்னேன். எனது தவற்றை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், இதற்காக நான் வெட்கப்படவில்லை. இந்த கிராமமக்கள் அனைவரும் என்னுடன் இருக்கிறார்கள். அந்த மாணவனை மதரீதியில் துன்புறுத்துவது எனது நோக்கமல்ல” என்றார்.

இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவுவதற்கு ஆல்ட் நியூஸின் இணை நிறுவனரும் பிரபல ஃபேக்ட் செக்கருமான முகமது ஸுபைர் முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மாணவனின் அடையாளத்தை வெளிப்படுத்தியதாக முசாபர் நகரிலுள்ள காவல் நிலையத்தில், சிறார் நீதிச் சட்டம் பிரிவு 74-ன் கீழ், முகமது ஸுபைர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY
நன்றி
Publisher: www.vikatan.com
