மற்ற ஊடகங்களின் முடிவுகள் தொடர்ந்து இங்கு வெளியாகும்..!
India Today Axis My India
சத்தீஸ்கர் (90 தொகுதிகள்)
காங்கிரஸ் – 40 – 50
பாஜக – 36 – 46
மற்றவை – 1 – 5
TV 9 Bharatvarsh Polstrat
மத்தியப் பிரதேசம் (230 தொகுதிகள்)
பாஜக – 106 முதல் 116
காங்கிரஸ் – 111 முதல் 121
மற்றவை – 0
ராஜஸ்தான் (200 தொகுதிகள்)
காங்கிரஸ் – 90 முதல் 100
பாஜக – 100 முதல் 110
மற்றவை – 0
Others To Come…!
Jan Ki Baat
தெலங்கானா (119 தொகுதிகள்)
பி.ஆர்.எஸ் – 40-55
காங்கிரஸ் – 48-64
பாஜக – 7-13
ஏஐஎம்ஐஎம் – 4-7
மத்தியப் பிரதேசம் (230 தொகுதிகள்)
பாஜக – 100 -123
காங்கிரஸ் – 102- 125
மற்றவை – 5
ராஜஸ்தான் (200 தொகுதிகள்)
காங்கிரஸ் – 62 – 85
பாஜக – 100 – 122
மற்றவை – 14 – 15
சத்தீஸ்கர் (90 தொகுதிகள்)
காங்கிரஸ் – 42 – 53
பாஜக – 34 45
மற்றவை – 3
மிசோரம் (40 தொகுதிகள்)
மிசோ தேசிய முன்னணி – 10 -14
காங்கிரஸ் – 5 – 9
பாஜக – 0 – 2
ZPM – 15 -25
தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய மாநிலங்களில் அக்டோபர், நவம்பர் என இரண்டு மாதங்களாக அடித்துவந்த தேர்தலை அலை இன்று மாலையோடு ஓய்ந்திருக்கிறது. இதில், மிசோரம் (40 தொகுதிகள்) மாநிலத்தில் 78 சதவிகித வாக்குகளும், இரண்டு கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்ற சத்தீஸ்கர் (90 தொகுதிகள்) மாநிலத்தில் முறையே 78 சதவிகித, 70 சதவிகித வாக்குகளும், மத்தியப் பிரதேச (230 தொகுதிகள்) மாநிலத்தில் 76 சதவிகித வாக்குகளும், ராஜஸ்தான் (199 தொகுதிகள்) மாநிலத்தில் 75 சதவிகித வாக்குகளும் பதிவாகி உள்ளது. தெலங்கானா (119 தொகுதிகள்) மாநிலத்தில் இன்று மாலை 5 மணியளவில் வாக்குப்பதிவு முடிந்திருக்கிறது.

2024 தேர்தலுக்கு முன்னதாக நடைபெற்றிருக்கும் சட்டமன்றத் தேர்தல் என்பதால், மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டு மற்ற நான்கு மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்க வேண்டுமென்று பா.ஜ.க-வும், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டு மற்ற மூன்று மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்க வேண்டுமென்று காங்கிரஸும் குறியாக இருக்கின்றன. மற்றபடி தெலங்கானாவில் பாரத ராஷ்டிர சமிதியும், மிசோராமில் மிசோ தேசிய முன்னணி கட்சியும் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளும் முனைப்பில் இருக்கின்றன. இந்த நிலையில் எந்தெந்த மாநிலத்தில் எந்தெந்த கட்சிகள் ஆட்சியப் பிடிக்கும், எத்தனை இடங்களில் வெற்றிபெறும் என்பது குறித்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகிறது.
நன்றி
Publisher: www.vikatan.com