பரபரப்பு..! பாஜக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு..!

பரபரப்பு..! பாஜக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு..!

சென்னையில் பாஜக நிர்வாகி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை மயிலாப்பூரில் உள்ள பாலாஜி நகரில் வசித்து வருபவர் மதன கோபால், இவர் பாஜகவின் பட்டியல் அணி நிர்வாகியாக உள்ளார். மதன கோபால் சரித்திர பதிவேடு குற்றவாளியும் ஆவார். இந்நிலையில், மதன கோபால் வீட்டில் இல்லாத சமயத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் கு ண்டு வீசியுள்ளதாக காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

பாஜக தொண்டர்கள் மீது திமுக அரசு திட்டமிட்டு காவல்துறையை ஏவி தாக்குதல் நடத்துவதாகவும் பொய் வழக்குகள் பதிவு செய்யப்படுவதாகவும் தமிழக பாஜகவினர் குற்றம்சாட்டி வந்த நிலையில், இதுகுறித்து அறிக்கை அளிக்க 4 பேர் கொண்ட குழு தமிழகம் வரும் நிலையில், தற்போது பாஜக நிர்வாகி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: 1newsnation.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *