Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION
நம்முடைய செய்தி நிறுவனத்தில் நாள்தோறும் பல்வேறு வேலைவாய்ப்பு தொடர்பான செய்திகளை நாம் வெளியிட்டு வருகின்றோம். அதன்படி இன்றும் பல்வேறு வேலை வாய்ப்பு செய்திகளை வெளியிட்டு இருக்கிறோம்.
ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா நிறுவனம் வெளியிட்டிருக்கும் ஒரு வேலை வாய்ப்பு தொடர்பான செய்தி குறிப்பு பற்றி தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம். அதாவது, மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்த வங்கி தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில், assistant பணிக்கு 450 காலி பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, இந்த பணியில் சேர விரும்பும் நபர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யும் நபர்களின் வயது குறைந்தபட்சம், 20வயதாகவும், அதிகபட்சம் 28 வயதாகவும் இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பணியில் சேர விரும்பும் நபர்கள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் மற்றும் கல்வி நிறுவனத்தில், bachelors degree முடித்திருப்பது மிகவும் அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு, மாதம் ஒன்றுக்கு ,20,700 முதல், 47,849 ரூபாய் வரையில் ஊதியமாக வழங்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் preliminary examination, main examination and language Proficiency Test மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிய வந்துள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய ஆர்வமாக இருக்கும் நபர்கள் என்ற அதிகாரப்பூர்வமான வலைதளத்தில் சென்று, விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களோடு, 4,10,2023 அன்று மாலைக்குள், விண்ணப்பம் செய்து, பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
The post ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா நிறுவனத்தில்,47,849 ரூபாய் ஊதியத்தில் காத்திருக்கும் அருமையான வேலைவாய்ப்பு….! முழு விவரம் உள்ளே….! appeared first on Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION.
நன்றி
Publisher: 1newsnation.com
