தேர்வு கட்டணத்தை ஆன்லைன் வழியில் மட்டுமே செலுத்த வேண்டும் என, ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.
கல்வியியல் பல்கலைக்கழகம் தரப்பில், அனைத்து கல்லுாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில்; தேர்வு கட்டணம், அரியர் கட்டணம், மறுமதிப்பீடு கட்டணம் போன்றவற்றை நேரடியாக பல்கலைகளில் ஆன்லைனில் மட்டுமே மாணவர்கள் செலுத்த வேண்டும். கல்லுாரிகள் வழியே பெறப்படாது. எனவே மாணவர்கள் தங்களது கல்லூரி கட்டணத்தை பணமாக செலுத்துவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக கல்லூரிகளுக்கென கட்டணம் நிர்ணயிக்கப்படவில்லை. இதற்கான கட்டணத்தை நிர்ணயிக்க ஓய்வுபெற்ற நீதிபதி பாலசுப்பிரமணியன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. அதன்படி, அரசு உதவி பெறும் பி.எட். கல்லூரிகளில் ரூ.10,000, தரச்சான்று பெற்ற கல்லூரிகள் ரூ.46,500-ம், தரச்சான்று இல்லாத கல்லூரிகள் ரூ.41,500-ம் கட்டணம் வசூலிக்க வேண்டும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் தேவைக்கேற்ப பி.எட். கல்லூரிகள் தொடங்கப்படும். மாநிலத்தில் மொத்தம் 706 பி.எட். கல்லூரிகள் உள்ளன. அதில், அரசுக் கல்லூரிகள் ஏழும், உதவிபெறும் 14 தனியார் கல்லூரிகளும், 685 தனியார் கல்லூரிகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி
Publisher: 1newsnation.com
