திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு விருப்பமுள்ள முன்னாள் படைவீரர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் பூங்கொடி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முன்னாள் படைவீரர்களுக்கான வேலைவாய்ப்பினை ஊக்குவித்திடும் பொருட்டு தமிழ்நாடு முதலமைச்சரின் 15.08.2023 அன்றைய சுதந்திர தின விழா செய்தியில் 10.000 முன்னாள் படைவீரர்களுக்கு ரூ.7 கோடி செலவில் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்குவது குறித்து அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட திறன் மேம்பாடு அலுவலகத்தின் மூலம் கீழ்கண்டவாறு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.
பிட்டர் (அட்வான்ஸ் பிளம்பிங்) 300 மணி நேரமும். வெல்டர் (அட்வான்ஸ் பெயிண்ட்டிங் டெக்னாலஜி ) 390 மணி நேரமும் எலெக்ட்ரீசியன். ஓயர்மேன் (தானியங்கி மின் பராமரிப்பு ) டரினர்,மெஷினிஸ்ட் (அட்வான்ஸ் சி.எம்.சி மெஷினிங் (மில்) 390 மணி நேரமும் மெஷினிஸ்ட் மெஷினிஸ்ட் அட்வான்ஸ்சி என்சி மெஷினிங் (லேத்) 390 மணி நேரமும், மெஷினிஸ்ட் (மேம்பட்ட சேர்க்கை உற்பத்தி ) 390 மணி நேரமும், பிட்டர் (குயாழிப்பு சரிபார்ப்பு மற்றும் பகுப்பாய்வு ) 480 மணி நேரமும் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக்செய்க
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் இப்பயிற்சியில் கலந்துகொண்டு பயன்பெறலாம். இப்பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் திண்டுக்கல் மாவட்ட முன்னாள் படைவீரர்கள் நல அலுவலகத்தில் நேரிலோ அல்லது அலுவலக மின்னஞ்சல் முகவரி exweldgl@tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தினை சமர்ப்பித்து பயன் பெறலாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சி தலைவர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
நன்றி
Publisher: tamil.news18.com