சிமென்ட் பூச்சுகள் நொறுங்கி, எலும்புக் கூடுகளைப் போல நிற்கும் மின்கம்பங்களைப் பார்க்கும்போது, அதன் அருகே செல்லவே பயப்படுவோம். ஆனால், பல காலமாகவே மோசமான நிலையில் மின்மாற்றிகள் பயன்பாட்டில் உள்ளதாகவும், புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்றும் வேதனை தெரிவிக்கிறார்கள் தூத்துக்குடி மாவட்ட மக்கள்.


தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டத்திற்கு உட்பட்ட மெஞ்ஞானபுரம், தேரியூர் மற்றும் வாகைவிளை பகுதிகளில், தென்னை முருங்கை போன்ற பயிர்களே மக்களின் வாழ்வாதாரமாக உள்ளன. அப்பகுதியில் பயன்பாட்டில் உள்ள மின்மாற்றிகள், அமைக்கப்பட்டுப் பல ஆண்டுகள் ஆனபடியால் அதில் உள்ள சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து உள்ளே உள்ள கம்பிகள் வெளியே தெரியும் வண்ணம் அபாய நிலையில் காணப்படுகிறது.



சாலையோரமே மின்மாற்றிகள் இருப்பதால் அப்பகுதியில் வேகமாக காற்று வீசினாலே மின்மாற்றிகள் சரிந்து விபத்து ஏற்படும் நிலையில் இருப்பதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள். இதனால் வாகன ஓட்டிகளும் அச்சத்துடன் பயணித்து வருகின்றனர். ஆதலால் மின்வாரிய அதிகாரிகள் இதனைக் கவனித்து இந்த அபாய நிலையில் காணப்படும் மின்மாற்றிகளை உடனடியாக மாற்றி புதியதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.



இது குறித்து மெஞ்ஞானபுரம் துணை மின்நிலைய உதவிப் பொறியாளரிடம் விளக்கம் கேட்ட போது, “பழுதான மற்றும் உடைந்த மின்மாற்றிகளை மாற்றக் கோரி அப்பகுதி மக்கள் புகாரளித்துள்ளனர். அவற்றை மாற்றுவதற்கான ஒப்புதல் பெற்று, சீரமைத்து வருகிறோம். இன்னும் ஒரு மாத காலத்திற்குள் சரி செய்யப்படும்” என்றார். விபரீதம் ஏதும் நடக்கும் முன்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
