அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் இருந்த அரக்கோணம் ரவியின் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டம் ரவிக்கும், மேற்கு மாவட்டம் எஸ்.எம்.சுகுமாருக்கும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. சுகுமார் இதற்கு முன்பாக மாவட்ட புரட்சித் தலைவி பேரவையின் பொருளாளராக இருந்தவர்.

திருவண்ணாமலை தெற்குக்கு அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தியும், வடக்குக்கு தூசி மோகனும் மாவட்ட செயலாளராக இருந்தனர். திருவண்ணாமலை நான்காக பிரிக்கப்பட்டு, கிழக்கு, மத்திய, வடக்கு, தெற்காக என மாற்றி, 4 மாவட்ட செயலாளருக்கு தலா இரண்டு தொகுதிகள் வழங்கப்பட்டு இருக்கிறது. அதன்படி, கிழக்குக்கு முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன், மத்திக்கு போளூர் தெற்கு ஒன்றிய செயலாளராக இருந்த ஜெயசுதா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தெற்கு, வடக்குக்கு அதே மா.செ.க்கள்தான் இருக்கின்றனர்.
அதேபோல, தஞ்சாவூர் நான்காக பிரிக்கப்பட்டு, கிழக்குக்கு பாரதிமோகன், மேற்குக்கு ரெத்தினசாமி, மத்திக்கு எம்.சேகர் (ஒரத்தநாடு பேரூராட்சி மன்றத் தலைவர்), தெற்கு மாவட்டத்துக்கு சி.வி.சேகர் ஆகியோர் நியமிக்கப்பட்டு இருக்கின்றனர்.
நன்றி
Publisher: www.vikatan.com
