அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு எதிரான முறைகேடு புகாரில், `முகாந்திரம் இருந்தால் மேல் நடவடிக்கை எடுக்கப்படும்” என லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக ஓ.பி.எஸ் அணியைச் சேர்ந்த புகழேந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘முந்தைய அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் உணவுத்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர் காமராஜ். இவர் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, பொது விநியோகத் திட்டத்தின்கீழ் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக பருப்பு, எண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருள்கள் கொள்முதல் செய்ததில் 350 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு செய்திருக்கிறார். அது தொடர்பாக நான் அளித்த புகாரின் அடிப்படையில், உரிய நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி A.D.ஜெகதீஷ் சந்திரா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் பிரதாப் ஆஜாராகி, பதில் மனு தாக்கல் செய்தார். அதில், `முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது இதே முறைகேடு தொடர்பாக ஏற்கெனவே அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டது.
2015-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் அத்தியாவசியப் பொருள்கள் கொள்முதல் செய்யும் டெண்டர் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளின் விவரங்களை அவர்களின் முகவரியோடு வழங்குமாறு தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் கழகத்துக்குக் கடிதம் எழுதப்பட்டிருக்கிறது.
நன்றி
Publisher: www.vikatan.com
