பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன், சென்னையில் இருந்து மகாராஷ்டிரா சென்றுக்கொண்டிருந்த போது காஞ்சிபுரம் அருகே அதிவேகமாக பைக்கில் சென்றுள்ளார். அப்போது, நிலைதடுமாறி கீழே விழுந்தார். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவர், தற்போது சென்னையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், டிடிஎஃப் வாசன் மீது 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், டிடிஎஃப் வாசன் சாகசங்களை செய்வதாக எண்ணிக்கொண்டு பல்வேறு வாகனங்களுக்கு இடையூறு செய்ததோடு, பல உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும் வகையில் அத்துமீறி நடந்து கொண்டது கண்டிக்கத்தக்கது என்று பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்திருக்கிறார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ”டிடிஎப் வாசன் காயமடைந்துள்ளார் என்று ‘ஐயோ பாவம்’ என்று நின்று விடாமல், பொது மக்களின் உயிருக்கு பெரும் ஆபத்து ஏற்படும் வகையில் இருசக்கர வாகனம் ஓட்டியதற்காக அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், டிடிஎப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.
நன்றி
Publisher: 1newsnation.com
