விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்களுடன் தொடங்கியது. இவர்களில் அனன்யா ராவ், பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன் ஆகியோர் எலிமினேட் ஆகியுள்ளனர்.
மேலும், பிக்பாஸ் வரலாற்றில் இம்முறை மேலும் 5 பேர் வைல்டு கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். இப்படியான நிலையில், பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கடந்த வாரம் எலிமினேஷனான விஜய் வர்மா பேட்டி ஒன்று கொடுத்துள்ளார். அதில், ”நான் பிக்பாஸ் வீட்டை விட்டு எலிமினேட் ஆவேன் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கல. எப்படி வெளியேறினேன் என்று தான் இப்பையும் யோசிச்சிட்டு இருக்கேன். இப்ப பிக்பாஸ் வீட்ல ஸ்மார்ட்டா விளையாடுறது என்றால் அது கூல் சுரேஷ் தான். அவர்கிட்ட இருந்து நிறைய விஷயங்கள கற்றுக்கொள்ளனும்’.
ஆனாலும், ‘என்னை விட குறைவாக விளையாடுறவுங்க எல்லாம் பிக் பாஸ் வீட்டுக்குள்ள இருக்காங்க. கடைசில எனக்கு இப்படி நடக்கும் என்று நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல. அதேவேளை, வைல்ட் கார்டு என்ட்ரியாக போவதற்கு வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நான் உள்ளே போவேன். அதுமட்டுமின்றி, ‘நீங்க வெளியே இருந்து பார்ப்பது பிக்பாஸ் கிடையாது உள்ள பல சம்பவங்கள் நடக்குது. ஆனால், வெளிய வேறு விதமா காட்டப்பட்டுது. பல காட்சிகள் கட் செய்து விடுவதால் முழுசா ரசிகர்களுக்கு அங்கு என்ன நடக்குது என்று தெரியல’ என தெரிவித்துள்ளார்.
நன்றி
Publisher: 1newsnation.com
