முதல்வர் தகுந்த நடவடிக்கை எடுப்பார்!
இந்த விவகாரம் குறித்துப் பேசிய சபாநாயகர் அப்பாவு, “காவல் நிலையத்தின் மீது, பாஜகவின் தலைமையகத்தின் மீது, ஆளுநர் மாளிகை மீது, மற்றொரு சம்பவம் உள்பட இந்த நான்கு சம்பவங்களிலும் ஒரே நபர் சம்பந்தப்பட்டிருக்கிறார். எனக்கு நினைவுக்குத் தெரிந்து தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் யாரும் பெட்ரோல் குண்டுகள் வீசியது கிடையாது. அதேபோல, பாஜகவின் சில தலைவர்கள், கோவையைச் சேர்ந்த ராமநாதன், திண்டுக்கல்லைச் சேர்ந்த பிரவீன்குமார், திருவள்ளூரைச் சேர்ந்த பரமானந்தம் பெட்ரோல் குண்டு வீச்சு நடத்தினர். அந்த விசாரணையில் பாஜகவில் முக்கிய பொறுப்பு கிடைக்க வேண்டியும், பாதுகாப்புக்காகவும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதேபோல, இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த மூன்று பேர் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

அவர்களும் கட்சியின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்று செய்தார்கள். இந்த ஆறு சம்பவத்தையும் நீங்கள் என்ன சொல்கிறீர்கள். இந்த கருக்கா வினோத் சம்பவம் நான்கையும் சேர்த்து, இந்த பத்து சம்பவங்களையும் பாஜகவும், இந்து மக்கள் கட்சியும் திட்டமிட்டு தமிழகத்தின் அமைதியைச் சீர்குலைக்க வேண்டும். வன்முறையைத் தூண்டவேண்டும் என்பதுதான். நான் அரசியலுக்காகப் பேசவில்லை. கட்சிக்காகப் பேசவில்லை. ஆளுநர் மாளிகை முன்பு வீசப்பட்ட பெட்ரோல் குண்டு சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஒரு குறிப்பிட்ட இயக்கம், குறிப்பிட்ட கட்சி மட்டுமே பெட்ரோல் குண்டு வைத்து விளையாடுகிறார்கள். தமிழக முதல்வர் சட்டத்தின் கீழ் ஆட்சி நடத்துகிறார். எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் விசாரித்து உண்மை குற்றவாளியைக் கண்டுபிடித்துத் தகுந்த நடவடிக்கை எடுப்பார்” என்று கூறினார்.
மேலும் இந்த ரெளடி கருக்கா வினோத்தை முன்னர் ஒருமுறை பாஜகவை சேர்ந்த ஒருவர் தான் ஜாமீனில் வெளியே எடுத்தார் என சில தகவல்கள் வெளியானது. எனினும் குறிப்பிட்ட அந்த நபர் தான் பாஜகவில் இல்லை எனக் கூறியுள்ளார்.
தவிர பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினரின் கருத்துகள், ஆளுநர் மாளிகையின் அடுத்தடுத்த அறிக்கைகள், ஆளும் கட்சியினர் பதில் அறிக்கைகள் என இந்த விவகாரம் தமிழக அரசியலில் ஒரு பரபரப்பை பற்ற வைத்திருக்கிறது.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
