இல்லத்தரசிகள் மகிழ்ச்சி – தங்கத்தின் விலை குறைந்து கொண்டே வருகிறது, சவரனுக்கு ரூ 32 குறைவு!

கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலை உயர்வதும், குறைவதுமாக மக்களுக்கு கண்ணாமூச்சி காட்டுகிறது. இந்த நிலையில் ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் இன்று சற்று குறைந்து காணப்படுகிறது.
அதன்படி, சவரனுக்கு 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.32 குறைந்துள்ளது. இதனால் ஒரு சவரன் ரூ.42,848 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.4 குறைந்து ரூ.5,356 க்கு விற்பனையாகிறது.
மேலும் வெள்ளி விலை கிராமிற்கு 50 காசுகள் குறைந்து ரூ.75.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.75,500 க்கு விற்பனையாகிறது.
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: jobstamil.in
நன்றி
Publisher: jobstamil.in