இயக்குனர் லோகேஷ் கனகராஜின் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா..? வாயை பிளக்கும் ரசிகர்கள்..!!

டாஸ்மாக் கடை முன்பு நின்று குடிக்க வேண்டாம் என்று சொல்லுங்கள்..!! விஜய் படம் என்றாலே பிரச்சனை தான்..!! லோகேஷ் பரபரப்பு பேட்டி..!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வசூலை அள்ளி வருகிறது. இந்நிலையில், லோகேஷ் கனகராஜின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜின் முந்தைய படமான மாஸ்டர், கைதி, விக்ரம் படத்தைப் போல இந்த படம் இல்லை என்றும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை லோகேஷ் கெடுத்துவிட்டார் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. எனினும், முதல் நாளில் இருந்தே வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. இதுவரை உலகளவில் மட்டுமே ரூ. 545 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அதேவேளை, லோகேஷ் கனகராஜ் திரைப்படங்களை இயக்க வருவதற்கு முன்னர் ஒரு வங்கயில் மேனேஜராக பணியாற்றினார். படங்களை இயக்க தொடங்கிய பின்புதான் இவரது வாழ்க்கையே மாறியுள்ளது. அதன்படி, இவருக்கு சுமார் 35.6 கோடி சொத்து மதிப்பு இருக்கலாம் என சினிமா வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே, லியோ படத்தை அடுத்து ரஜினிகாந்தின் 171-வது படத்தை இயக்க உள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்த படத்திற்காக இவர் 70 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: 1newsnation.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *