I.N.D.I.A கூட்டணியில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், லல்லு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி போன்றவை அங்கமாக உள்ளன. இவை இந்தி பேசும் மக்கள் அதிகமாக வசிக்கும் பீகார், உத்தரப்பிரதேசத்தில் களமாடி வருகின்றன. இந்நிலையில் கடந்த INDIA கூட்டணியின் நான்காவது கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. கூட்டத்தில் நிதிஷ் குமாரின் உரைக்கு ஆங்கில உரை கேட்டதால், திமுக-வின் டி.ஆர் பாலுவிடம் நிதிஷ் குமார், “இந்தி மொழி தான் இந்தியாவின் தேசிய மொழி. இதைப் புரிந்துகொள்ள கற்றுக் கொள்ளுங்கள்” எனக் கூறியதாக வெளியான தகவல்கள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தின.

அதன்பிறகு திமுக எம்.பி தயாநிதி மாறன் “உத்தரப்பிரதேசம், பீகாரில் இந்தி மட்டும் படிப்பவர்கள், இங்கு வந்து வீடு கட்டுகிறார்கள், சாலை போடுகிறார்கள்” எனப் பேசியதாக ஒரு காணொளி வெளியானது. இதனை ட்விட்டரில் பகிர்ந்து பீகார் மாநில பா.ஜ.க எம்.பி கிரிராஜ் சிங், “உ.பி/பீகாரில் இருந்து இந்தி பேசும் மக்கள் தமிழகத்திற்கு வந்து சாலைகள் மற்றும் கழிப்பறைகளை சுத்தம் செய்கிறார்கள் என்று திமுக எம்பி தயாநிதி மாறன் கூறுகிறார்.
நிதிஷ் குமார் மற்றும் லாலு யாதவ் ஆகியோர் இந்தி பேசும் மக்கள் குறித்த தங்கள் கூட்டணிக் கட்சியின் கருத்தை ஏற்கிறார்களா? இந்தி பேசும் பீகாரி சகோதர சகோதரிகள் மீது திமுக மற்றும் இந்திய கூட்டணி ஏன் இவ்வளவு வெறுப்பு கொள்கிறது என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும்?” என பதிவிட்டுள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
