தி.மு.க-வின் துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி தொகுதி எம்.பி-யுமான கனிமொழி, இன்று தனது 56-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு, அரசியல் கட்சித் தலைவர்களும், தொண்டர்கள் பலரும் நேரிலும், தொலைபேசி வாயிலாகவும் வாழ்த்து தெரிவித்தனர். நேற்று, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடிப் பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வந்த எம்.பி கனிமொழி, இன்று காலை சென்னைக்கு வந்தார்.


தனது பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நினைவிடத்துக்குச் சென்று, மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து, தி.மு.க தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினைச் சந்தித்தும் வாழ்த்துப் பெற்றார். இதற்கிடையில், நடிகர் விஜய் கனிமொழியை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
நன்றி
Publisher: www.vikatan.com