பெரும்பாலான அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில், அடுத்த மாதம் சேலத்தில் நடைபெறவிருக்கும் தி.மு.க இளைஞரணியின் மாநில மாநாடு, நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குச்சாவடி பொறுப்பாளர் பணி தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கூட்டம் முடிந்து செய்தியாளர்களிடம் பேசிவிட்டு வந்த அமைச்சர் கே.என்.நேருவிடம், அவர் போட்டிருந்த கருங்காலி மாலையைப் பற்றி அமைச்சர் ஐ.பெரியசாமி கேட்டிருக்கிறார்.

அப்போது, தனக்கு `வைரத்துல கருங்காலி மாலை வேணும்னு” நேருவிடம் ஐ.பெரியசாமி கூறியிருக்கிறார். அதற்கு, `பரவால்ல இத மாட்டிக்கிங்க’னு தான் அணிந்திருந்த வெள்ளி கருங்காலி மாலையை ஐ.பெரியசாமி கழுத்தில் போட்டுவிட்டார் நேரு. ஐ.பெரியசாமி, அதை திருப்பிக் கொடுக்க முயன்றபோது, `நீங்களே போட்டுக்குங்க’ என்று நேரு கூறிவிட்டார். அதன் பின்னர், இருவரும் அங்கிருந்து அவரவர் காரில் ஏறி புறப்பட்டுச் சென்றனர்.
நேரு போட்டிருந்த கருங்காலி மாலையின் விலை 3,000 ரூபாய் என்று அவரே கூறியதாக அங்கிருந்த மற்றவர்கள் தெரிவித்திருக்கின்றனர். கருங்காலி டாபிக் டிரெண்டாக்கிக்கொண்டிருக்கும் இந்த சூழலில், ஐ.பெரியசாமிக்கு நேரு கருங்காலி மாலை போட்டுவிடும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைததளங்களில் வேகமாகப் பரவிக்கொண்டிருக்கிறது.
நன்றி
Publisher: www.vikatan.com
