“தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தரும் எண்ணம் கர்நாடகாவுக்கு

காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தராமல் இழுத்தடிக்கும் கர்நாடக அரசின் செயலை எதிர்த்து, தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆலோசனைப்படி தமிழ்நாடு அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது. இதற்கிடையே தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறப்பது தொடர்பாக காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரை மற்றும் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடக அரசு செயல்படுத்தவில்லை.

டி.கே.சிவக்குமார், சித்தராமையா

இதனால் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து கட்சி எம்.பி.க்களும் ஒன்றிணைந்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் டெல்லியில் மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத்தை இன்று சந்தித்தனர். இந்த சந்திப்பிற்குப் பிறகு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தண்ணீர் இருந்தும் கொடுப்பதற்கு கர்நாடக அரசு மறுக்கிறது. தண்ணீர் கொடுக்கும் எண்ணம் கர்நாடக அரசுக்கு இல்லை.

காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டுக்குரிய நீரை திறந்துவிடும்படி மத்திய அரசு, கர்நாடகாவுக்கு வலியுறுத்த வேண்டும் என மத்திய அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்திடம் வலியுறுத்தினோம். கர்நாடகாவிலிருந்து வருபவர்களிடமும் மனுவை வாங்கி வைத்துக்கொள்கிறீர்கள், எங்களிடமிருந்து கொடுக்கப்படும் மனுவையும் வாங்கி வைத்துக்கொள்கிறீர்கள். ஆனால், இதில் உறுதியான முடிவை இன்னும் எடுக்கவில்லை. எனவே, இதற்கான தீர்வை வழங்க வேண்டும் என கோரியிருக்கிறோம். மாநிலங்களுக்கிடையேயான பிரச்னையை தீர்ப்பதற்காகதான் மத்திய அரசு இருக்கிறது. எனவே, இந்த விவகாரம் குறித்து உரிய நடவடிக்கை உடனடியாக வேண்டும் எனத் தெரிவித்தோம்.

அமைச்சர் துரைமுருகன்

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்றுக் குழு அமைக்கப்பட்டது. இவை பிறப்பிக்கும் உத்தரவுகள் சரியாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது. எனவே, மத்திய அரசு கர்நாடகத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் 5000 கன அடி தண்ணீர் திறந்துவிட காவிரி மேலாண்மை வாரியம் வலியுறுத்தியுள்ளது. ஆனால் அந்த உத்தரவுகளை கர்நாடகா அரசு முறையாக செயல்படுத்தவில்லை என்று எடுத்துக் கூறினோம்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *