இதுகுறித்து நம்மிடம் பேசிய சத்தியமூர்த்தி பவன் சீனியர்கள், ” “கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணியில், ‘திருவள்ளூர், ஆரணி, திருச்சி, கரூர், சிவகங்கை, கிருஷ்ணகிரி, விருதுநகர், கன்னியாகுமரி, தேனி, புதுச்சேரி ஆகிய 10 தொகுதிகள் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டது. இதில் தேனியில் மட்டுமே தோல்வி ஏற்பட்டது. எனவே இந்த முறையும் சம்மந்தப்பட்ட தொகுதிகளை கேட்டு பெற வேண்டும். மேலும் ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரைக்கு பிறகு காங்கிரஸ் கட்சிக்கான ஆதரவு தமிழகத்தில் அதிகரித்துள்ளது.

எனவே வரும் தேர்தலில் கூடுதலாக ஈரோடு, திருப்பூர், சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருநெல்வேலி, தென்காசி, திண்டுக்கல் ஆகிய தொகுதிகளை நாம் பெற வேண்டும்’ என கே.எஸ்.அழகிரி டெல்லி தலைமையிடம் தெரிவித்து இருக்கிறார். இதன்மூலம் தலைவர் தி.மு.க கூட்டணியில் 18 தொகுதிகளை எதிர்பார்க்கிறார். இந்த தகவலை வரும் 28-ம் தேதி நடக்கும் பேசுவார்த்தையின் போது தெரிவிப்பார். அதற்கு தி.மு.க கூறும் கருத்தை பெற்று டெல்லிக்கு அனுப்புவார். பிறகு அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும் அடுத்த மாதம் 13-ம் தேதி தமிழகத்திற்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் கார்கே வருகிறார். அவர் தி.மு.கவுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவார். மேலும் முக்கிய நிர்வாகிகளை அழைத்து தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆலோசனைகளை வழங்குவார்” என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
