இந்தாண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்கான பணிகளை தொடங்கியுள்ளது திமுக. தற்போது மூன்று குழுக்களை அமைத்து அறிக்கை வெளியிட்டுள்ளது அக்கட்சி தலைமை.
நாடாளுமன்ற தேர்தலுக்கான ‘தேர்தல் அறிக்கை தயாரிப்பு’ குழு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமை அறிவிக்கப்பட்டுள்ளது. அக்குழுவில், டி.கே.எஸ் இளங்கோவன், விஜயன், பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி ராஜா, கோவி.செழியன், கே.ஆர்.என் ராஜேஸ்குமார், அப்துல்லா, எழிலன் நாகநாதன், மேயர் பிரியா ஆகியோர் இடம் பெற்றுள்ளார்கள்.
அதே போல, நாடாளுமன்ற தேர்தலுக்கான கட்சி பணிகளை ஒருங்கிணைக்கவும் மேற்பார்வையிடவும் முதல்வர் ஸ்டாலின் குழு அமைத்து இருக்கிறார். அக்குழுவில் கே.என் நேரு, ஆர்.எஸ் பாரதி, எ.வ வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
மேலும், கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திட டி.ஆர் பாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவில் கே.என் நேரு, பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா மற்றும் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் திமுக தனது மக்களவை தேர்தலுக்கான பணிகளை விரைவு படுத்தியுள்ளது தெரிகிறது. 21 -ம் தேதி நடைபெறவுள்ள இளைஞரணி மாநாட்டுக்கு பின்னர் இந்த பணிகள் இன்னும் வேகம் பெறும் என கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
