அதையடுத்து பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை குறித்துப் பேசிய பிரேமலதா, “இஸ்லாமியர்களை விடுவிக்கிறோம் என்று சொல்கிறார்கள். ஆனால், விடுதலை செய்யப்படுபவர்களில் ஒருவர்கூட இஸ்லாமியர் இல்லை. `சிறுபான்மையினரின் பாதுகாவலர்கள் நாங்கள், ஒட்டுமொத்த இஸ்லாமியர்களையும், கிறிஸ்தவர்களையும் காப்பாற்றுபவர்கள் நாங்கள்” என்று அவர்கள் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், என்ன செய்திருக்கிறார்கள் என்பதுதான் இஸ்லாமிய சகோதரர்களும், கிறிஸ்தவ சகோதரர்களும் இன்றைக்கு கேட்கிறார்கள். எனவே அவர்களை விடுதலை செய்கிறோம் என்று சொல்லிவிட்டு, அவர்களில் ஒருவரைக்கூட விடுதலை செய்யவில்லை என்றால், அது நிச்சயமாகக் கண்டிக்கக்கூடிய விஷயம். சாதி, மதம், இனம், மொழி பாகுபாடு இல்லாமல் விடுதலை செய்யப்பட வேண்டும்” என்றார்.

பின்னர், நீட் தேர்வில் தி.மு.க-வின் செயல்பாடுகள் தொடர்பாகப் பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த பிரேமலதா, “நீட் தேர்வால் மாணவர்களைக் குழப்பிக் கொண்டிருக்கிறார்கள். இதனை அரசியலாக்கிவிட்டார்கள். இந்தியா முழுக்க அனைத்து மாநிலங்களிலும் நீட் தேர்வு இருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும்தான் எதிர்ப்பு. எங்களைப் பொறுத்தவரை நீட் தேர்வு நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும். ஆனால், அதற்கான சாத்தியக்கூறு இருக்கின்றனவா… நீட்டை யாரெல்லாம் எதிர்க்கிறார்களோ அவர்களிடம் இதைக் கேளுங்கள். இந்தியா முழுக்க இருக்கும் ஒரு கொள்கையில், தமிழ்நாட்டுக்கு மட்டும் எப்படி விலக்கு தர முடியும் என்று குடியரசுத் தலைவர், ஆளுநர் என எல்லோரும் கூறுகிறார்கள். அப்படியென்றால் மாணவர்களைக் குழப்பி தற்கொலைக்குத் தூண்டுவது தி.மு.க-வும், அவர்களுடைய கூட்டணிக் கட்சிகளும்தான். வேறு யாரும் கிடையாது. உங்களால் முடியும் என்றால் இரும்புக்கரம் கொண்டு தடுத்து நிறுத்துங்கள். முடியவில்லை என்றால் மாணவர்களைக் குழப்பாதீர்கள். இன்றைக்கு மாணவர்கள் எத்தனையோ தேர்வுகள் எழுதுகிறார்கள். எவ்வளவோ பேர் தேர்ச்சி அடையாமல் போகிறார்கள். ஆனால், எல்லாவற்றுக்கும் தற்கொலையா தீர்வு. இது அரசியலாக்கப்பட்டதனால், அந்த சூழ்ச்சியில் மாணவர்கள் மாட்டிக்கொண்டு தற்கொலை என்ற முடிவுக்குச் செல்கிறார்கள். அரசியல் கட்சிகள் மாணவர்களுக்கு நல்ல அறிவுரை கொடுக்க வேண்டும். முடியாத பட்சத்தில் இதை அரசியலாக்க வேண்டாம்” என்று கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
