தமிழில் ரஜினியுடன் ஜெயிலர் படத்தில் நடித்த கர்நாடகா சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமாரின் மனைவி கீதா சிவ ராஜ்குமார், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். சிவ ராஜ்குமாரின் மைத்துனர் மது பங்காரப்பா கர்நாடகா கல்வி அமைச்சராகப் பொறுப்பு வகித்துவருகிறார். இவர்களைத் தொடர்ந்து, நடிகர் சிவ ராஜ்குமாரும் காங்கிரஸ் கட்சியில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், நேற்று பெங்களூருவில் “எய்டிகா’ சமூக மாநாடு நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், “எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கர்நாடக சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமாரிடம், கர்நாடகாவில் எந்த மக்களவைத் தொகுதியில் வேண்டுமானாலும் போட்டியிடுங்கள் எனக் கேட்டிருக்கிறேன். ஏனெனில், லோக் சபாவிற்குள் நுழைய அவருக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு. எப்போது வேண்டுமானாலும் திரைப்படங்களில் நடிக்கலாம். உங்கள் வீட்டு வாசலுக்கு வந்திருக்கும் வாய்ப்பை தவறவிடாதீர்கள் எனக் கேட்டுக்கொண்டேன்” எனப் பேசினார்.
நன்றி
Publisher: www.vikatan.com
