`விவாகரத்து வழக்குகளில் பரந்த அணுகுமுறையுடன் விசாரணை

விவாகரத்து நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து, சம்பந்தப்பட்ட பெண் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இம்மனுவை, நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் எம்.எம் சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. நீதிபதிகள், “1955-ம் ஆண்டு இந்து திருமணச் சட்டத்தின் 13 (1),13(1A) பிரிவுகள் ஆகியன, `கொடுமை’ உள்ளிட்ட பல்வேறு காரணங்களின் அடிப்படையில் விவாகரத்து வழங்கலாம் என்கின்றன. அதே சமயம் `கொடுமை’ என்ற வார்த்தைக்கு நிலையான அர்த்தத்தை அவை வழங்கவில்லை.

ஒரு வழக்கில், ஒருவருக்கு கொடுமை என்று குறிப்பிடுவது, மற்றொருவருக்கு அதே மாதிரி இருக்காது. இது, நபருக்கு நபர் மாறுபடும். ஒரு பெண்ணுக்கு கொடுமை என்ற கண்ணோட்டத்தில் பார்ப்பது, ஆணுக்கு கொடுமையாக இருக்காது. எனவே, விவாகரத்து வழக்குகளில் பரந்த அணுகுமுறையுடன் கூடிய விசாரணை தேவை.

இத்தகைய வழக்குகளில் அனைத்து சூழ்நிலைகளையும் நீதிமன்றங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்’ என்று கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்ற அமர்வு, இந்த வழக்கில் விசாரணை நீதிமன்றம் மற்றும் சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து, மனுதாரருக்கு விவாகரத்து ஆணையை வழங்கித் தீர்ப்பளித்தது.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *