தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு நிதியை கிள்ளிக்கொடுப்பது ஏன்?!

சென்னையில் 2015 டிசம்பரில் ஏற்பட்ட பெருமழை வெள்ளத்தில் ஏராளமானோர் உயிரிழந்தனர். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள உடைமைகளை மக்கள் இழந்தனர். அப்போது, மத்திய அரசிடம் ரூ.25,912 கோடி நிவாரணம் வழங்குமாறு தமிழ்நாடு அரசு கோரியது. ஆனால் மத்திய அரசு வெறும் ரூ.1,940 கோடியையே வழங்கியது. வர்தா புயலினால் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்பட்டபோது, ரூ.22,573 கோடி நிவாரண நிதி வழங்குமாறு பிரதமரை சந்தித்து தமிழ்நாடு முதல்வர் கேட்டார்.

கொரோனா நிவாரணம்கொரோனா நிவாரணம்

கொரோனா நிவாரணம்

புயலின் பாதிப்புகளை மத்திய குழுவினர் இரு முறை வந்து ஆய்வு செய்தனர். ஆனால், நிவாரணத் தொகையைத் தரவில்லை. கொரோனா பெருந்தொற்றால் மோசமாகப் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. ஆனால், மிகக்குறைந்த நிவாரண நிதியை மத்திய அரசு ஒதுக்கியது. அது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ‘கொரோனா பாதிப்பில் 2-வது இடத்தில் தமிழ்நாடு இருக்கிறது. ஆனால், குறைவான நிதியை மத்திய அரசு வழங்கியது ஏன்? தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்கிய ரூ.510 கோடி போதாது’ என்று காட்டமாகக் கூறியது.

மத்திய அரசுக்கு மிக அதிக வரி வருவாயை தருகிற தமிழ்நாட்டுக்கு, மாநிலங்களுக்கான நிதி பகிர்வின் போது மிக குறைந்த அளவிலான தொகையை தருவதையே வழக்கமாக கொண்டுள்ளது. இதற்கு மத்தியில் இருப்பவர்கள், பின் தங்கிய மாநிலங்களுக்கு முன்னுரிமை என்று சொல்கிறார்கள். இதனை ஓரளவுக்கு ஏற்கலாம், தான், ஆனாலும், பெரும் பாதிப்புகளை சந்திக்கும் போது, அல்லது பேரிடர் காலங்களில் தேவையான நிதியை ஒதுக்குவது, மிக மிக அவசியமாகிறது.

இதனால்தான், தமிழ்நாட்டை மத்திய அரசு மாற்றான்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது என்ற விமர்சனம் தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *