ஆண்கள் சிகிச்சைப் பிரிவில் உள்நோயாளியாகச் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இரண்டு நாள்களாக காலை நேரத்தில் வெளியே வந்து தேநீர் குடித்துவிட்டு, மீண்டும் வந்து அவரது படுக்கையில் படுத்துக் கொள்வார். கடந்த வெள்ளிக்கிழமையும் அதேபோல், தேநீர் குடிக்க வந்தவர், மருத்துவமனைக்கு வெளியே அம்புலன்ஸ் நிறுத்துமிடத்துக்குப் பின்புறம் உட்கார்ந்து கொண்டிருந்தபோது, திடீரென மயக்கம் ஏற்பட்டு அங்கேயே விழுந்துவிட்டார்.
தாராபுரம் மருத்துவமனையைப் பொறுத்தவரையில் ஏற்கெனவே ஊழியர்கள் பற்றாக்குறை நிலவி வருகிறது. முதியவர்களுக்கும், ஆதரவற்றவர்களுக்கும் தனி சிகிச்சை பிரிவும் இல்லாததால், இது போன்ற அவலம் அடிக்கடி நிகழ்கிறது. பொதுவாக அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் உறவினர்கள், அவர்களுடன் இருந்தாலுமே மருத்துவப் பணியாளர்கள் பெரிதாகக் கண்டுகொள்ள மாட்டார்கள். இதிலும் இது போன்ற யாருமே இல்லாத ஆதரவற்றவர்கள் அனுமதிக்கப்பட்டால், அவர்களின் நிலைமை சொல்லிக் கொள்ளவே முடியாது” என்றார்.

இது குறித்து தாராபுரம் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் சத்தியராஜ் கூறுகையில், “சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட முதியவரை மருத்துவப் பணியாளர்கள் குப்பை மேட்டில் போடவில்லை. 108 மூலம் அனுமதிக்கப்பட்ட முதியவருக்கு போதிய சிகிச்சைகள் அளிக்கப்பட்ட பின்னர், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. தேநீர் குடிக்க வெளியில் சென்ற முதியவர் மயக்கமடைந்து குப்பை மேட்டில் விழுந்து கிடப்பதை அறிந்து, உடனடியாக அவரை மீட்டு சிகிச்சை அளித்தோம். தாராபுரம் அரசு மருத்துவமனையில் ஆதரவற்ற முதியவர்களுக்கான சிசிக்கை பிரிவு இல்லாததாலும், அவருக்கு தலையில் ஸ்கேன் எடுக்க வேண்டுமென்பதாலும் திருப்பூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார்” என்றார்.
நன்றி
Publisher: www.vikatan.com
