அவர் மூன்று மணி நேரம் சூதாட்டம் விளையாடி 3.5 கோடியை இழந்துள்ளார். அதற்கான பணத்தை அமெரிக்க டாலரில் கொடுத்துள்ளார். ஆனால் பா.ஜ.க. இதனை மறைக்க பார்க்கிறது. மகாராஷ்டிராவில் பல்வேறு பிரச்னைகளால் மக்கள் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். ஆனால் பவன்குலே சூதாட்டத்தில் பொழுதை கழிக்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பா.ஜ.க. தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ”எங்களது மாநில கட்சி தலைவர் எப்போதும் சூதாட்டத்தில் பங்கேற்றது கிடையாது. அங்கு அவர் குடும்பத்தோடு சென்று இருந்தார்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், `ஆதித்ய தாக்கரே கையில் இருப்பது என்ன பிராண்ட் விஸ்கி?’ என்று கேள்வி எழுப்பியதோடு இது தொடர்பாக ஒரு புகைப்படத்தையும் அக்கட்சி வெளியிட்டுள்ளது. மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸும் இது தொடர்பாக அளித்த பேட்டியில், ”பவன்குலே தனது குடும்பத்தோடு ரெஸ்டாரன்டுக்கு சாப்பிட சென்றுள்ளார். அங்கு சூதாட்டமும் நடந்திருக்கிறது” என்று விளக்கம் அளித்துள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
