இந்தியாவின் பெயரை பாரத குடியரசு என்று மாற்றப்படுவதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், இது தற்போது பெரும் சர்ச்சையாகி உள்ளது. நேற்றில் இருந்து இந்தியா முழுக்க விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முதல் சட்டத்தை சீர்திருத்தி இந்தியா என்பதை நீக்கி பாரத் என்பதை பயன்படுத்த முடிவு எடுக்கப்படலாம்.
மத்திய பாஜக அரசு இதற்கான திட்டங்களில் இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது. பாரத குடியரசுத் தலைவர் என குடியரசுத் தலைவர் மாளிகை அழைப்பிதழ் அளித்துள்ளதும் இந்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜி20 மாநாட்டில் பங்கேற்கும் விருந்தினர்களுக்கு அழைப்பிதழில் பாரத குடியரசுத் தலைவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் பெயரை பாரத் என்று மாற்றம் செய்வதற்கு ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியா என்ற வார்த்தையை அரசியல் சாசனத்தில் இருந்து நீக்கினால், மீண்டும் ஒருமுறை பணமதிப்பு நீக்கம் செய்ய நேரிடும். ரூபாய் நோட்டுகளில் Reserve Bank Of India என எழுதப்பட்டுள்ளது. இதனால், நாட்டின் பெயரை மாற்றினால், ரூ.100, 200, 500 நோட்டுகள் செல்லாததாகிவிடும் என்று கடுமையாக எச்சரித்தார்.
நன்றி
Publisher: 1newsnation.com