`மனைவியை அடித்து துன்புறுத்த எந்தச் சட்டமும் கணவனுக்கு உரிமை

இந்த வழக்கை, நீதிபதிகள் சுரேஷ் குமார் கைட் மற்றும் நீனா பன்சால் கிருஷ்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இது குறித்து நீதிமன்றம் கூறுகையில், “மே 2013 அன்று, காயமடைந்த நிலையில் தன் பெற்றோர் வீட்டில் அப்பெண் விடப்பட்டுள்ளார். அதன் பின்னர், அப்பெண்ணின் கணவர் திரும்பவும் அப்பெண்ணை தனது வீட்டிற்கு அழைத்துச் செல்லவில்லை.

இதிலிருந்து அப்பெண்ணுடனான உறவை அவர் தவறவிட்டுள்ளார். இதில் உடல் ரீதியான பிரிவு மட்டும் இல்லை என்பதோடு, புகுந்த வீட்டிற்கு அவரை அழைத்துச் செல்லாததில் ஏதோ நோக்கம் இருப்பதையும் உணர்த்துகிறது.

மீண்டும் திருமண உறவைத் தொடங்கும் எண்ணம் கணவருக்கு இல்லை. விவகாரத்துக்கான மனுவும், இருவரும் பிரிந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

திருமணம் செய்து கொண்ட ஆண், கணவர் என்பதால், மனைவியை அடிப்பதற்கும் சித்ரவதை செய்வதற்கும் அவருக்கு எந்த உரிமையும் அளிக்கப்படவில்லை. இந்த நடத்தை அப்பெண்ணுக்கு விவாகரத்து அளிக்கும், 1955 இந்து திருமண சட்டம் 13 (1) பிரிவின் கீழ் உடல்ரீதியான கொடுமைக்குத் தகுதியானது’’ எனக்கூறி விவாகரத்து வழங்கப்பட்டுள்ளது. 

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *