அந்த நோட்டீஸில், “டெல்லி அரசுப் பள்ளியில் இரண்டு சிறுவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக டெல்லி மகளிர் ஆணையத்துக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. ரோகிணியில் இருக்கும் அரசுப் பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவன் பள்ளியின் மற்ற மாணவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்ட மாணவன், இந்த ஆண்டு ஏப்ரலில் பள்ளியால் ஏற்பாடு செய்யப்பட்ட கோடைக்கால முகாமின்போது தன் சக மாணவர்களால் பூங்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, ஏழு நாள்கள் பாலியல் வன்கொடுமைக்குள்ளாகியிருக்கிறார்.


அதோடு, குற்றம்சாட்டப்பட்ட மாணவர்கள், இதை யாரிடமும் சொல்லக் கூடாது என்று அந்த மாணவனை மிரட்டியிருக்கின்றனர். பின்னர் கொஞ்ச நாள் கழித்து, தனக்கு நேர்ந்ததை ஆசியர்களிடம் மாணவன் தெரிவித்தபோது, இது பற்றி வெளியில் புகாரளிக்க வேண்டாம் என ஆசியர்கள் கூறியிருக்கின்றனர். இந்தச் சம்பவம் மட்டுமல்லாமல், அதே கோடைக்கால முகாமின்போது, 12 வயது மாணவனை அதே மாணவர்கள் பள்ளிக் கழிவறையில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர். இதையும் வெளியில் சொல்லக் கூடாது என்று அந்த மாணவனை மற்ற மாணவர்கள் மிரட்டியிருக்கின்றனர். இவ்வாறிருக்க கடந்த 16 நாள்களுக்கு முன்பு அந்த மாணவனை அதே மாணவர்கள் மீண்டும் கழிவறையில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றிருக்கின்றனர்.


இதை அந்த மாணவன் ஆசிரியர்களிடம் எடுத்துரைத்தபோது, இது பற்றி யாரிடமும் பேசக் கூடாது என்று ஆசியர்கள் கூறிவிட்டனர். எனவே, போலீஸும், கல்வி இயக்குநரகமும் இந்த இரு சம்பவங்களிலும் நடவடிக்கை எடுத்து, செப்டம்பர் 1-ம் தேதிக்குள் அதன் விரிவான அறிக்கையை வழங்க வேண்டும்” என்று ஸ்வாதி மாலிவால் குறிப்பிட்டிருந்தார்.
பின்னர் இது தொடர்பாக ஆம் ஆத்மி அரசைச் சாடிய பா.ஜ.க., குற்றம்சாட்டப்படும் மாணவர்கள் கைதுசெய்யப்படுவதுடன், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகக்குழுவிடம் விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியது. பின்னர் இந்தச் சம்பவம் வெளிவந்த அடுத்த நாளே, இந்த விஷயத்தில் புகாரளிக்கத் தவறியதற்காக, சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் பள்ளியின் துணை முதல்வரை கெஜ்ரிவால் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டிருப்பதாக மாநிலக் கல்வி அமைச்சர் அதிஷி தெரிவித்தார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com