விழாவுக்கு வெளியிலிருந்து, புரோகிதர்கள் வரவழைக்கப்பட்டு, பூஜை உள்ளிட்ட சடங்குகளும் செய்யப்பட்டுள்ளன. இதில், பல்கலைக்கழகத் துணைவேந்தரே சடங்குகள் செய்து, மந்திரம் ஓதி இருக்கிறார். அரசு நிறுவனங்கள் மதச்சார்பற்றவையாக இருக்க வேண்டும் மற்றும் மதம் சார்ந்த விழாக்கள் அரசு நிறுவனங்களின் செலவில் நடத்தப்படக்கூடாது என்னும் அரசியலமைப்புச் சட்ட சரத்து எண்-28 விதிமுறையை மீறி, இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இதனை, இந்திய மாணவர்கள் சங்கம் அமைப்பு வன்மையாக கண்டிக்கிறது. மேலும் இதுபோன்ற விதிகளை மீறிய செயலில் ஈடுப்படவர்களின் மீது உடனடி நடவடிக்கை அரசு எடுக்க வேண்டும்” என அதில் கூறப்பட்டுள்ளது.
இப்பிரச்னை தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கிருஷ்ணா, “தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் பொங்கல், தீபாவளி, ஓணம் என அனைத்து பண்டிகைகளும் கொண்டாட அனுமதி வழங்கப்படும். மேலும் இந்த பண்டிகைகளில் ஒரு சாரார் மட்டுமே கலந்து கொள்ளவில்லை. அனைத்து மாணவர்களும் கலந்து கொண்டனர். அந்த வகையில் துணைவேந்தர் என்கிற முறையில் நானும் கலந்து கொண்டேன். இந்த பண்டிகை கணபதி பாடல் பாடி தொடங்கப்பட்டது. மேலும் இந்த நிகழ்ச்சி சாதி, மதம் அனைத்திற்கும் அப்பாற்பட்டு நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தவறு நடந்திருந்தால் இனிவரும் காலங்களில் நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன். மேலும், இந்த பண்டிகையில் யாகம் நடத்தப்படவில்லை. மேலும் “ஜெய்ஸ்ரீ ராம்” வாசகங்கள் எழுதப்பட்டிருந்தது எனக்கு தெரியாது. மேலும், ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் யார் செயல்பட்டு இருந்தாலும் கமிட்டி அமைத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com