
கடந்த ஆகஸ்ட் மாதம்- 2023 ல் பங்கு பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு OMR தாள் நகலுடன் சேர்த்து கணக்கீட்டுத் தாளையும் கட்டணத்துடன் வழங்கப்பட உள்ளதாக வாரியம் முடிவு செய்துள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகளில் ஆசிரியர் பதவிக்கான விண்ணப்பதாரர்களின் தகுதியை மதிப்பீடு செய்வதற்காக, மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தால் (CBSE) மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (CTET) நடத்தப்பட்டு வருகிறது.
தற்போது விண்ணப்பதாரர்களுக்கு ஒரு அறிவிப்பை தேர்வு வாரியம் வெளியிட்டு உள்ளது. அதன்படி கணக்கீட்டுத் தாளை பெற விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு OMR தாளின் நகலுடன் கணக்கீட்டுத் தாளும் வழங்கப்படும் என்றும், அதற்கான கட்டணம் ரூ.500/- யை கடைசி நாளான 10.11.2023 அல்லது அதற்கு முன்னும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Also Read >> உங்க பட்ஜெட்ல மொபைல் வாங்கனுமா? அட்டகாசமான வசதியுடன் Motorola வின் Edge 40 Neo போன்…!
மேலும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் – 2005 இன் கீழ் ஏற்கனவே விண்ணப்பித்தவர்களுக்கு அதற்கான கட்டணத்தை ரூ500/- கடைசி தேதிக்குள் செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதோடு OMR தாளின் நகலுடன் கூடிய கணக்கீட்டு தாள் எந்த ஒரு காரணத்திற்காக அதாவது காட்சிக்காகவோ, வணிக நோக்கத்திற்காகவோ அல்லது அச்சு ஊடகத்திற்காகவோ எந்த நிறுவனத்திற்கும் அல்லது பள்ளிக்கும் வழங்கப்படாது என்றும் கூறி உள்ளது. மேலும் விண்ணப்பதாரர் மூலமாக சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் முழுமையடையாத விண்ணப்பங்கள் எந்த ஒரு விளக்கம் இல்லாமல் நிராகரிக்கப்படும்.
மேலும் விரைவு தபால் மூலமாக மட்டும் தான் OMR தாளின் நகலுடன் கூடிய கணக்கீட்டு தாள் விண்ணப்பதாரருக்கு அனுப்பப்படும். 10.11.2023 க்குப் பிறகு எக்காரணம் கொண்டும் இந்த அலுவலகத்தில் பெறப்படும் கோரிக்கைகள் ஏற்று கொள்ளப்படாது என்று தேர்வு வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
நன்றி
Publisher: jobstamil.in