ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

புதுச்சேரியில் கட்டிய ஒரு மாதத்தில் மூன்று அடுக்கு மாடி குட்டியிருப்பு கட்டடம் சரிந்தது.
புதுச்சேரியில் கட்டி முடித்த ஒரே மாதத்தில் சீட்டுக்கட்டாக சரிந்த கட்டடம் – என்ன காரணம்?
புதுச்சேரியில் மூன்று அடுக்கு மாடி கட்டடம் சரிந்து விழுந்தது. கட்டி ஒரு மாதமே ஆன நிலையில், புதுமனை புகுவிழா கூட நடைபெறவில்லை.
ஆட்டுப்பட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சாவித்ரி. அரசு இலவச பட்டா வழங்கிய நிலத்தில் அவர் வீடு கட்டியுள்ளார். வீட்டின் அருகே கடந்த ஏழு மாதங்களாக வாய்க்கால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்கான ஆழமான பள்ளம் ஒன்று தோண்டப்பட்டது.
அதன் பிறகு, கட்டடம் லேசாக சாய்ந்து காணப்பட்டது. எனவே, ஒப்பந்ததாரரிடம் முறையிட்டுள்ளார் சாவித்ரி. வீடு மேலும் சாய்ந்துள்ளதை அடுத்து, வீட்டின் தரத்தை ஆய்வு செய்ய அதிகாரிகள் வந்துக் கொண்டிருந்தனர். அவர்கள் வரும் போதே கட்டடம் கீழே விழுந்தது. நல்வாய்ப்பாக உயிர் சேதம் யாருக்கும் ஏற்படவில்லை.
முழு விவரம் காணொளியில்…
நன்றி
Publisher: பிபிசிதமிழ்
