ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

காஸா மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த இஸ்ரேலை வலியுறுத்தும் அரபு நாடுகள் – வீடியோ
பாலத்தீனம்: இஸ்லாமிய நாடுகள் அவசர ஆலோசனை – சௌதி அரேபியா, இரான் பேசியது என்ன?
காஸா மீதான தாக்குதல்கள் மற்று ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என சவுதி உள்ளிட்ட அரபு நாடுகள் வலியுறுத்தியுள்ளன. பாலத்தீனர்களுக்கு எதிரான தாக்குதலை தன்னை தற்காத்துக் கொள்வதற்கான நடவடிக்கை என இஸ்ரேல் கூறி வருவதை நிராகரிப்பதாக அரபு நாடுகள் தெரிவித்துள்ளன.
செளதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் இஸ்லாமிய அரபு உச்சி மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. அரபு லீக்கில் உள்ள 22 நாடுகள் மற்றும் இஸ்லாமிய அரபு நாடுகளின் கூட்டமைப்பான OIC-யில் அங்கம் வகிக்கும் நாடுகள் இதில் பங்கேற்றன.
காஸா மீது இஸ்ரேல் தொடர்ச்சியான தாக்குதல்களை தொடுத்து வரும் நிலையில், செளதி அரேபியாவில் அரபு நாட்டுத் தலைவர்கள் ஒன்று கூடியது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. குறிப்பாக இரான் அதிபர் ரைசி செளதி அரேபியா சென்றது கவனம் பெற்றது. 11 ஆண்டுகளுக்குப் பிறகு அதிபர் செளதி அரேபியா செல்வது இதுவே முதல்முறை.
காஸாவில் போர் நிறுத்தத்தை கொண்டு வர அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் சவுதி அரேபியா அழுத்தம் தர முயன்றது. இதன் ஒரு பகுதியாகவே,
சவுதி அரேபியாவின் பட்டத்து இளவசர் முகமது பின் சல்மான் அரபு நாட்டுத் தலைவர்களை ஒருங்கிணைத்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது
இந்த உச்சி மாநாட்டில் பாலத்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ், இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, துருக்கு அதிபர் எர்துவான், சிரிய அதிபர் பஷர் அல் அசாத் உள்ளிட்ட பல அரபு நாட்டுத் தலைவர்கள் பங்கேற்றனர்.
இஸ்ரேல் போர் குற்றங்களில் ஈடுபட்டு வருவதாகவும் இதனை முறையாக சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என இஸ்லாமிய அரபு உச்சி மாநாடு வலியுறுத்தியுள்ளது.
என்ன நடந்தது இந்த கூட்டத்தில்? சௌதி அரேபியா, இரான் பேசியது என்ன?

நன்றி
Publisher: பிபிசிதமிழ்
