பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ககன்தீப் சிங் ஜசோவால்
- பதவி, பிபிசி செய்தியாளர்
-
“நான் எனது வாழ்க்கையின் முக்கியமான நான்கு ஆண்டுகளை வீணடித்தேன், 33 லட்சம் ரூபாயை இழந்தேன், அமெரிக்காவுக்குச் செல்லும் எனது கனவை நிறைவேற்ற நிலத்தையும் இழந்தேன்.”
இப்படித்தான் தன் அமெரிக்கா பயணத்தை விவரிக்கிறார், அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டு பஞ்சாபில் குடியேறிய குல்தீப் சிங் போபராய் .
அவர் ஃபரித்கோட் மாவட்டத்தில் உள்ள கோடக்புரா நகரில் வசிக்கிறார்.
குல்தீப் சிங், ‘டங்கி’ முறையில் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்தார். பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் திரைப்படம் ‘டங்கி’ (பொதுவாக பஞ்சாபியில் கழுதை என்று அழைக்கப்படுகிறது) வெளியானது. இது ‘டங்கி’ மூலம் இந்தியர்கள் சட்டவிரோதமாக குடியேறுவதை அடிப்படையாகக் கொண்டது.
பஞ்சாபில் சட்டவிரோதமாக குடியேறும் போது, கழுதை வழியே வெளிநாடுகளுக்குச் சென்று குடியேறிய கதைகள் பல விவாதங்களில் வருகின்றன.
டங்கி படத்தின் காரணமாக, இந்த விவகாரம் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது, இந்த சூழலில், பிபிசி நியூஸ் பஞ்சாபி குல்தீப் சிங் போபராயிடம் கழுதை பாதை வழியாக இடம்பெயர்ந்த அனுபவத்தைப் பற்றி பேசினோம்
‘டாங்கி’ அல்லது டங்கி வழி என்றால் என்ன?
பிராந்திய மொழியில் கழுதை டாங்கி என்று அழைக்கப்படுகிறது, இந்த வார்த்தை ‘ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்வது’ என்ற பொருளில் பஞ்சாபி மொழியிலிருந்து வந்தது.
இந்த டங்கி என்கின்ற ஆபத்தான இடம்பெயர்வு பாதைகள் வழியாக மக்கள் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவிற்கு செல்கின்றனர்.
பஞ்சாப் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மேற்கத்திய நாடுகளுக்கு, குறிப்பாக அமெரிக்காவுக்குச் செல்ல ‘டங்கி’ வழியை விரும்புகிறார்கள்.
இந்த மனித கடத்தலில் சர்வதேச நெட்வொர்க் உள்ளது. இந்த சட்டவிரோத பயணத்தை அரசு முடிவுக்கு கொண்டு வந்துவிட்டதாக கூறுகிறது. ஆனால், இந்த நிகழ்வுகள் இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது.
கடந்த காலங்களில் பல இளைஞர்கள் அமெரிக்கா செல்லும் போது உயிரிழந்த சம்பவங்கள் பல வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
பட மூலாதாரம், Getty Images
குல்தீப்பின் கனவு நிறைவேறியதா?
ஆரம்பத்தில் இருந்தே அமெரிக்கா செல்ல வேண்டும் என்ற கனவு தனக்கு இருந்ததாகவும், கடந்த 2010ம் ஆண்டு முதலில் சிங்கப்பூர் சென்றதாகவும், பின்னர் ஈராக்கிற்கு டிரைவராக சென்றதாகவும் குல்தீப் சிங் கூறினார்.
ஈராக்கில் இருந்து 2012ல் இந்தியா திரும்பிய அவர், அமெரிக்காவில் வசிக்கும் தனது நண்பர் ஜக்ஜித் சிங்கைத் தொடர்பு கொண்டார்.
பின், அவர் அமெரிக்கா செல்ல திட்டமிட்டு ஒரு முகவரை தொடர்பு கொண்டார்.
“முதலில் நாங்கள் ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோவுக்குச் சென்றோம், அங்கு உணவு பிடிக்கவில்லை,” என்றார் குல்தீப் சிங்.
பின்னர் அவர்கள் அங்கு தங்க விரும்பாததால், அவர்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புமாறு தங்கள் ஏஜெண்டிடம் கேட்டுள்ளனர்.
இதையடுத்து பிரேசில் செல்லும் முகவர் ஒருவர் குல்தீப்பை பிரேசிலில் வேலைக்கு சேர்த்து விட்டுள்ளார்.
பிரேசிலில் உள்ள மற்றொரு முகவருடன் தொடர்பு கொண்டதாக குல்தீப் சிங் கூறினார். அவர் அமெரிக்காவிற்கு அனுப்ப $30,000 கேட்டுள்ளார்.
முதலில், அவர்கள் கேட்டது பெரும் தொகை என்பதால், அமெரிக்கா செல்லும் எண்ணத்தை கைவிட்டு, தன்னிடம் போதுமான பணம் இல்லை எனக் கூறியுள்ளார் குல்தீப்.
“எங்கள் முகவர் ஒரு மாற்று வழியைச் சொன்னார். அதற்கு 15,000 அமெரிக்க டாலர் செலவில், விமானத்தில் செல்வதற்கு பதிலாக தரைவழியாக செல்ல வேண்டும் எனக் கூறினார். அதற்கு நான் ஒப்புக்கொண்டேன்,” என்றார் குல்தீப்
பனாமா காடுகளில் தண்ணீருக்காக தவித்த குல்தீப்
முதலில் முகவர்களிடம் 3000 டாலர்கள் கொடுத்ததாகவும், பின்னர் அவரும் அவரது நண்பரும் பேருந்தில் ஏற்றிச் செல்லப்பட்டதாகவும் குல்தீப் சிங் கூறினார்.
“அப்போது எங்கள் முகவர் தனது ஆட்களையோ அல்லது டாக்சிகளையோ அனுப்புவார் என்று கூறினார்,” என்றார் குல்தீப் சிங்
அவர்கள் இறுதியாக ஈக்வடாரில் நுழைந்ததாகவும், அங்கிருந்து தங்கள் பயணத்திற்கு பேருந்தில் சென்றதாகவும் கூறினார் குல்தீப்.
அதன் பிறகு அவர்கள் கொலம்பியாவை அடைந்தனர், அங்கு அவர்கள் ஒருவரின் வீட்டில் தங்க வைக்கப்பட்டனர்.
“நாங்கள் கொலம்பியாவில் இருந்து கடல் வழியாக குவாத்தமாலாவிற்குள் நுழைந்தோம். இது என் வாழ்க்கையின் மிக மோசமான பயணம், நாங்கள் கிட்டத்தட்ட ஆறு நாட்களை குவாத்தமாலா வெப்பத்தில் விசிறிகூட இல்லாமல் கழித்தோம்,” என்றார் குல்தீப்.
பட மூலாதாரம், Getty Images
குல்தீப் பனாமாவை அடைய காடுகளைக் கடக்க கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் நடக்க வேண்டியிருந்தது என்று நினைவு கூர்ந்தார்.
காட்டில் பயணம் செய்யும் போது, ஒரு ஆற்றைக் கடந்ததாகக் கூறினார், அங்கு தண்ணீர் கழுத்து வரை இருந்துள்ளது.
தங்களுக்கு சுமார் 8 கிலோ தண்ணீர் மற்றும் பிற பானங்கள் கிடைத்ததாகவும், அது தீர்ந்து போன பிறகு தங்களிடம் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
“பின்னர், அவர்கள் சக நபரிடம் கொஞ்சம் தண்ணீரைப் பகிர்ந்து கொள்ளச் சொன்னார்கள், அவர் ஒரு சில துளிகள் தண்ணீரை மட்டுமே பகிர்ந்து கொண்டார். என் வாழ்வில் தண்ணீரின் முக்கியத்துவத்தை உணர்ந்த தருணம் இருந்தது.
இரண்டு நாட்களுக்குப் பிறகு, நாங்கள் பனாமாவிற்குள் நுழைந்தோம், அங்கு நாங்கள் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அமெரிக்காவிற்குச் செல்கிறோம் என்றும் அதிகாரிகளிடம் சொன்னோம்,” என்றார் குல்தீப்.
தொடர்ந்து, “பனாமாவில் உங்கள் உண்மையான நாடான இந்தியாவின் பெயரைக் குறிப்பிட வேண்டாம் என்று எனது முகவர் எங்களிடம் கூறினார்; இல்லையெனில், அவர்கள் உங்களை நாடு கடத்துவார்கள் என்றார். குவாத்தமாலாவிற்குப் பிறகு சால்வடார் மற்றும் அதன் பிறகு மெக்சிகோவிற்குள் நுழைய முடிந்தது,” என்றார் குல்தீப்.
பட மூலாதாரம், Getty Images
மெக்சிகோவிலிருந்து அமெரிக்கா செல்வது எப்படி?
“நாங்கள் மெக்சிகோவிற்குள் நுழைந்ததும், எங்கள் முகவர் ஒருவர் எங்களை தனது காரில் ஏற்றிக்கொண்டு பின்னால் படுக்கச் சொன்னார். அவர் மீண்டும் ஒரு இடத்தில் எங்களை இறக்கிவிட்டார். அங்கிருந்து இரண்டு மலைகளை நடந்தே கடக்கச் சொன்னார்கள்,” என மெக்சிகோவில் நடந்ததை பகிர்ந்தார் குல்தீப்.
உள்ளூர் மாஃபியாவின் அச்சுறுத்தல் காரணமாக மெக்ஸிகோவில் உள்ள தனது வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என அவரது முகவர்கள் எச்சரித்ததாகவும் குல்தீப் கூறினார்.
குல்தீப் இறுதியாக ஒரு நதியைக் கடந்து தனது கனவு நாடான அமெரிக்காவை அடைந்தார்.
ஆனால், அவர் அமெரிக்க எல்லையிலேயே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார், பின்னர் சிறையில் உறைபனியில் வைக்கப்பட்டார்.
“போலீசாரும் நிர்வாகமும் என்னை விசாரித்தார்கள், அவர்கள் என் மீது சந்தேகமடைந்தனர். இந்தியாவில் என் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்பதை அவர்கள் அறிந்து கொண்டனர்.அப்போது, நான் விரைவில் நாடு கடத்தப்படுவேன் என்பதை உணர்ந்தேன்,” என தான் கைதான தருணத்தை விவரித்தார் குல்தீப்.
பட மூலாதாரம், Getty Images
நாடு கடத்தப்படவுள்ளதை தெரிந்துகொண்டதும் தான் உணர்ந்தை விளக்கிக்கூறிய குல்தீப், “நான் பஞ்சாபில் சொந்த நிலத்தை விற்று, 30 லட்சம் ரூபாய் செலவழித்து அமெரிக்கா வந்ததால், என்னை திருப்பி அனுப்புகிறார்கள் என்று சொன்னதும் என் தலையில் இடி விழுந்ததைப்போல இருந்தது,” என்றார்.
நீதிமன்றத்தில் அவர் முறையீடு செய்ததாகவும், ஆனால் நீதிமன்றம் அதை நிராகரித்ததாகவும் குல்தீப் கூறினார்.
“பின்னர், நான் மீண்டும் இரண்டாவது முறை, முறையிட்டேன். அதுவும் தள்ளுபடி செய்யப்பட்டது,” என்றார்.
அவர் சுமார் 22 மாதங்கள் தடுப்பு மையத்தில் இருந்ததாகவும், பின்னர் தான் விடுவிக்கப்பட்டதாகவும் கூறினார்.
“ஐந்து மாதங்களுக்குப் பிறகு, நான் குடியேற்ற அலுவலகத்திற்குச் சென்றபோது, அவர்கள் இந்தியத் தூதரகத்தில் இருந்து எனது பாஸ்போர்ட்டைக் கண்டுபிடித்ததாகவும், அதைக் காவலில் எடுத்துக்கொண்டதாகவும், அது தான் அமெரிக்காவில் எனது கடைசி நாள் என்றும் சொன்னார்கள்,”என்றார் குல்தீப்
பட மூலாதாரம், Getty Images
குல்தீப் தனது பெற்றோருக்கு கனவுகள் இருப்பதாகவும், அமெரிக்காவில் கடினமாக உழைத்து தனது குடும்பத்திற்கு ஒரு சிறந்த வாழ்க்கையை வழங்க திட்டமிட்டதாகவும், ஆனால் அனைத்தும் சிதைந்ததாக வருந்தினார்.
“நான் அமெரிக்காவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டேன், 2016 இல் இந்தியாவுக்குத் திரும்பினேன், பின்னர் நான் எனது டாக்ஸி தொழிலைத் தொடங்கினேன், இப்போது நான் எப்போதும் இந்தியாவில் இருக்க விரும்புகிறேன்,”என்றார் குல்தீப்
நன்றி
Publisher: பிபிசிதமிழ்
