ஆகவே முதலமைச்சர் அவர்களே, நீலி கண்ணீர் வடிக்காதீர்கள். இதை எல்லாம் உங்கள் தந்தை காலத்தில் இருந்து நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த அரசுக்கு உண்மையிலேயே காவிரி விவகாரத்தில் அக்கறை இருக்குமேயானால், எங்களுடைய எடப்பாடியார் கூறியது போல… பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு 35,000 ரூபாய் வழங்க வேண்டும். காவிரி நதிநீரை பெற்று தருவதற்கு உண்மையான அக்கறையோடு இந்த அரசு செயல்பட வேண்டும். இப்போது குருவை சாகுபடியை கெட்டு குட்டிச்சுவர் ஆக்கிவிட்டீர்கள். அடுத்து சம்பா பயிர் வைப்பதற்கு இந்த அரசு என்ன திட்டம் வைத்திருக்கிறது? இதுவரை எந்த திட்டத்தையும் சொல்லவில்லை. அப்போது எதற்கு இந்த அரசு. பெருமையாக இன்று பேட்டி கொடுத்த ரகுபதி அவர்களை கேட்கிறேன். எங்களுடைய எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள், ‘அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்’ என்று சொன்னதில் உங்களுக்கு என்ன கஷ்டம். அப்படி கூட்டத்தை கூட்டி பேசுவதற்கு ஒரு முதலமைச்சருக்கு என்ன தயக்கம். கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் சிவக்குமார் அவர்கள் அனைத்து கட்சியோடு டெல்லி சென்று பார்க்கிறார்கள். நீங்கள் டெல்லி போனீர்களா. அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினீர்களா? இன்றைக்கு பாஜக-வை எதிர்ப்பதாக நாடகமாடி நடித்துக் கொண்டிருக்கின்ற முதலமைச்சர்…

உதயநிதி, விளையாட்டுத்துறை அமைச்சர் ஆனதும் பாரதப் பிரதமரை சந்திப்பதற்கு நேரம் வாங்கி பேச வைப்பதற்கு மட்டும் அக்கறையுள்ள இந்த ஸ்டாலினுக்கு, இப்போது உங்களால் செல்ல முடியவில்லையா? ஏன் உங்கள் மகனை அனைத்து கட்சி கூட்டத்திற்கு அனுப்பி வைத்திருக்க வேண்டியதுதானே… ஏன் அனுப்பவில்லை, எல்லாம் நடிப்பு ஒரு கடமை. மத்திய நீர்வளத்துறை அமைச்சரை பார்த்த துரைமுருகனும், டி.ஆர்.பாலுவும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவர்களோடு சென்றவர்கள் தான் பேசியிருக்கிறார்கள், இவர்கள் எதுவும் பேசவில்லை. இதுதான் திமுக. எப்படி தமிழகத்தின் எல்லா வாழ்வாதார பிரச்னையிலும் காட்டி கொடுத்ததோ திமுக, அதேபோல இன்று தந்தை வழியிலே ஸ்டாலினும் டெல்டா விவசாயிகளுக்கு மிகப்பெரிய துரோகத்தையும், வஞ்சத்தையும் இழைத்துக் கொண்டிருக்கிறார். எனவே காவிரி நீரை தர மறுக்கின்ற காவேரி காங்கிரஸ் அரசை இந்த அரசு கண்டிக்க வேண்டும்.
“கர்நாடகா காங்கிரஸ் அரசை நாங்கள் கண்டிக்கிறோம்” என்று உங்களுக்கு தைரியம் இருந்தால் நாளை ஒரு தீர்மானத்தை இயற்றுங்கள் பார்ப்போம். அப்படி இயற்ற உங்களுக்கு தைரியம் இருக்கிறதா… இல்லை. எனவே இந்த நடிப்பு, நாடகத்தை விட்டுவிட்டு எதிர்க்கட்சிகள் மீது சேற்றை வாரி பூசுவதை நிறுத்திவிட்டு, முதலமைச்சர் என்ற அக்கறையோடு செயல்படுங்கள். ஊழல் செய்த அமைச்சர்களை காப்பாற்ற துடிக்கின்ற இந்த அரசு, விவசாயிகளை காப்பாற்ற ஏன் நடவடிக்கை எடுக்க தவறுகிறது” என்றார் ஆவேசமாக.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
