ஜப்பான்: டோக்கியோவில் 379 பேருடன் விமானம் தரையிறங்கிய போது திடீர் தீ – என்ன நடந்தது?

ஜப்பான்: டோக்கியோவில் 379 பேருடன் விமானம் தரையிறங்கிய போது திடீர் தீ - என்ன நடந்தது?

ஜப்பான் விமான விபத்து

பட மூலாதாரம், NHK

ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் இன்று (ஜன. 02) டோக்கியோவில் ஹனேடா விமான நிலையத்தின் ஓடுதளத்தில் தரையிறங்கும்போது தீப்பிடித்து விபத்து ஏற்பட்டது.

என்.ஹெச்.கே எனும் ஜப்பானிய அரசு ஊடகத்தில் அதன் காணொளி வெளியானது. அதில், விமானத்தின் ஜன்னல்கள் மற்றும் அதன் கீழே தீப்பிடித்து எரிவதை காண முடிந்தது. விமானத்தின் ஓடுதளத்திலும் தீ பரவியது.

அந்த விமானம் தரையிறங்கும்போது அங்கிருந்த மற்றொரு விமானத்தில் மோதி இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என, அதிகாரிகளை மேற்கோளிட்டு என்.ஹெச்.கே ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விபத்து ஏற்பட்டபோது உள்ளே பயணிகள் இருந்தனர்.

உள்ளே இருந்த 367 பயணிகள் மற்றும் பணியாளர்கள் உள்பட 379 பேரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாக, என்.ஹெச்.கே. ஊடகம் தெரிவித்துள்ளது.

ஜே.ஏ.எல். 516 என்ற அந்த விமானம் ஹொக்கைடோவிலிருந்து புறப்பட்டது என்றும் தெரிவித்துள்ளது.

இந்த அண்மைச் செய்தி மேலதிக தகவல்களுடன் தொடர்ந்து புதுப்பிக்கப்படும்.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *