பட மூலாதாரம், Getty Images
தெலங்கானா, ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடந்து முடிந்திருக்கின்றன.
இப்போது இந்தத் தேர்தல்களுக்கான வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வரத்துவங்கியிருக்கின்றன.
இதுவரை வெளியாகியிருக்கும் கருத்துக்கணிப்பு முடிவுகள் இங்கே தொகுத்தளிக்கப்படுகின்றன.
இப்பக்கத்தில் தகவல்கள் தொடர்ந்து புதுப்பிக்கப்படுகின்றன.
பட மூலாதாரம், Getty Images
தெலங்கானாவில் யார் முன்னிலை வகிக்க வாய்ப்பு?
மொத்தம் 119 இடங்கள் இருக்கும் தெலங்கானாவில் 60 இடங்கள் பெற்றால் பெரும்பான்மை.
ஜன் கி பாத் நடத்திய கணிப்பு, காங்கிரஸ் 48 முதல் 64 இடங்களையும், பாரத் ராஷ்ட்ரிய சமிதி 40 முதல் 55 இடங்களையும், பா.ஜ.க 7 முதல் 13 இடங்களையும் காங்கிரஸ் 42 முதல் 53 இடங்களையும், பா.ஜ.க 34 முதல் 45 இடங்களையும், பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்று கூறுகிறது.
இந்தியா டிவி – சி.என்.எக்ஸ் நடத்திய கணிப்பின்படி, காங்கிரஸ் 63 முதல் 79 இடங்களையும், பாரத் ராஷ்ட்ரிய சமிதி 31 முதல் 47 இடங்களையும், பா.ஜ.க 2 முதல் 4 இடங்களையும் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்று கூறுகிறது.
டிவி 9 பாரத்வர்ஷ் நடத்திய கணிப்பின்படி, கங்கிரஸ் 49 முதல் 59 இடங்களையும், பாரத் ராஷ்டிரிய சமிதி 48 முதல் 58 இடங்களையும், பா.ஜ.க 5 முதல் 10 இடங்களையும் பெறுவதற்கான வாய்ப்புள்ளது.
சத்தீஸ்கரில் என்ன நிலைமை?
சத்தீஸ்கரில் மொத்தம் 90 இடங்களில் 46 இடங்கள் வெல்லும் கட்சிக்குப் பெரும்பான்மை கிடைக்கும்.
இந்தியா டுடே – ஆக்சிஸ் மை இந்தியா நடத்திய கணிப்பின்படி காங்கிரஸ் 40 முதல் 50 இடங்களையும், பா.ஜ.க 36 முதல் 46 இடங்களையும், பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
டிவி5 நியூஸ் நடத்திய கணிப்பின்படி, காங்கிரஸ் 54 முதல் 64 இடங்களையும், பா.ஜ.க 29 முதல் 39 இடங்களையும், பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
இந்தியா டிவி – சி.என்.எக்ஸ் நடத்திய கணிப்பு, காங்கிரஸ் 46 முதல் 56 இடங்களையும், பா.ஜ.க 30 முதல் 40 இடங்களையும், பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்று கூறுகிறது.
அதே சமயம் ஜன் கி பாத் நடத்திய கணிப்பு, காங்கிரஸ் 42 முதல் 53 இடங்களையும், பா.ஜ.க 34 முதல் 45 இடங்களையும், பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்று கூறுகிறது.
பட மூலாதாரம், Getty Images
மத்தியப் பிரதேசத்தில் போட்டி எப்படி இருக்கும்?
மத்திய பிரதேசத்தில் மொத்தம் 230 இடங்கள் உள்ள நிலையில், பெரும்பான்மைக்கு 116 இடங்கள் பெறவேண்டும்.
டிவி 9 பாரத்வர்ஷ் – போல்ஸ்ட்ராட் நடத்திய கணிப்பின் படி காங்கிரஸ் 111 முதல் 121 இடங்களும், பா.ஜ.க 106 முதல் 116 இடங்களும் பெறும் வாய்ப்புள்ளது.
ஜன் கி பாத் நடத்திய கணிப்பு, காங்கிரஸ் 102 முதல் 125 இடங்களையும், பா.ஜ.க 100 முதல் 123 இடங்களையும், பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்று கூறுகிறது.
பட மூலாதாரம், Getty Images
ராஜஸ்தானில் யார் முன்னிலை வகிக்கக் கூடும்?
ராஜஸ்தானில் மொத்தம் 199 இடங்கள் உள்ள நிலையில் பெரும்பான்மைக்கு 100 இடங்கள் பெறவேண்டும்.
டிவி 9 பாரத்வர்ஷ் – போல்ஸ்ட்ராட் நடத்தியக் கணிப்பின் படி பா.ஜ.க 100 முதல் 110 இடங்களும், காங்கிரஸ் 90 முதல் 100 இடங்களும் பெறும் வாய்ப்புள்ளது.
ஜன் கி பாத் நடத்திய கணிப்பு, பா.ஜ.க 100 முதல் 122 இடங்களையும், காங்கிரஸ் 62 முதல் 85 இடங்களையும், பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்று கூறுகிறது.
டைம்ஸ் நௌ – ஈடிஜி நடத்திய கணிப்பின்படி, பா.ஜ.க 108 முதல் 128 இடங்களும் காங்கிரஸ் 56 முதல் 72 இடங்களும் பெற வாய்ப்புள்ளது.
மிசோரம் மாநிலத்தில் கணிப்பு என்ன?
மிசோரம் மாநிலத்தில் மொத்தம் 40 இடங்கள் உள்ளன.
ஜன் கி பாத் நடத்திய கணிப்பு, மிசோ தேசிய முன்னணி 10 முதல் 14 இடங்களையும், ஸோரம் மக்கள் இயக்கம் 15 முதல் 25 இடங்களையும், காங்கிரஸ் 5 முதல் 9 இடங்களையும் பா.ஜ.க 2 இடங்களையும் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது என்று கூறுகிறது.
தேர்தல் எப்போது நடந்தது?
நவம்பர் 7-ஆம் தேதி முதல் இன்று (நவம்பர் 30-ஆம் தேதி) வரை இந்த மாநிலங்களில் வாக்குப்பதிவு நடந்தன. இன்று தெலங்கானாவில் நாக்குப்பதிவு நடந்தது.
முதலில் மிசோரமில் நவம்பர் 7-ஆம் தேதியும், சத்தீஸ்கரில் நவம்பர் 7 மற்றும் நவம்பர் 17-ஆம் தேதிகளிலும், மத்தியப் பிரதேசத்தில் நவம்பர் 17-ஆம் தேதியும், ராஜஸ்தானில் நவம்பர் 25-ஆம் தேதியும், கடைசியாக தெலங்கானாவில் நவம்பர் 30-ஆம் தேதியும் வாக்குப்பதிவுகள் நடந்தன.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்
