இஸ்ரேலுக்குள் ஊடுருவ இரண்டாம் உலகப்போர் உத்தியை ஹமாஸ் பயன்படுத்தியது எப்படி?

இஸ்ரேலுக்குள் ஊடுருவ இரண்டாம் உலகப்போர் உத்தியை ஹமாஸ் பயன்படுத்தியது எப்படி?

இரண்டாம் உலகப்போரின் உத்தியை பயன்படுத்தியதா ஹமாஸ் ?

பட மூலாதாரம், Hamas

படக்குறிப்பு,

ஹமாஸின் ‘அல்-கஸ்ஸம் பிரிகேட்ஸ்’ ஆயுதக்குழுவைச் சேர்ந்தவர்கள் இஸ்ரேல் மீதான தாக்குதலை தொடங்கியபோது தங்களது குழுவைச் சேர்ந்த ஒருவர் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டனர்.

கடந்த சனிக்கிழமை ஹமாஸ் ஆயுதக்குழுவைச் சேர்ந்தவர்கள் இஸ்ரேல் மீது கொடிய தாக்குதலை நடத்தியபோது, அந்நாட்டிற்குள் படையெடுத்து வந்த ஆயுதக்குழுவினர் பாராசூட் மூலமாகவும் நாட்டிற்குள் நுழைந்தார்கள்.

‘இஸ் அல்-தின் அல்-கஸ்ஸம்-ப்ரிகேட்ஸ்’ ஆயுதக்குழுவின் ராணுவப் பிரிவினர் ஒரு இசை விழாவிற்குச் சென்றவர்கள் மற்றும் காசா பகுதியைச் சுற்றியுள்ள இஸ்ரேலிய நகரங்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தீடீர் தாக்குதலை ‘அல்-அக்ஸா தாக்குதல்’ எனக் கூறினர்.

பாலத்தீன ஆயுதக்குழுவைச் சேர்ந்தவர்கள் பாராசூட் மூலமாகவும், கடல் மற்றும் நில வழியாகவும் ஊடுருவியதாக இஸ்ரேலிய ராணுவ செய்தித் தாெடர்பாளர் ரிச்சர்ட் ஹெக்ட் உறுதிப்படுத்தினார்.

அல்-கஸ்ஸாம் ஆயுதக்குழவைச் சேர்ந்தவர்கள் பாராசூட் மூலமாகத் தரையிறங்குவது போன்ற படங்களும், வீடியோக்களும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன. இஸ்ரேல் மீதான தாக்குதலின்போது இதுபோன்ற நுட்பத்தைப் பயன்படுத்தியது இதுவே முதல்முறையாகக் கருதப்படுகிறது.

பாராசூட்டில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர்

பட மூலாதாரம், Hamas

படக்குறிப்பு,

சனிக்கிழமையன்று இஸ்ரேலின் தெற்குப் பகுதிகளில் பாலத்தீனிய ஆயுதக்குழுவைச் சேர்ந்தவர்கள் ஊவடுருவியதைத் தொடர்ந்து, இஸ்ரேல்-காசா எல்லையில் உள்ள வேலிப்பகுதியில் பாலத்தீனியர்கள் நுழைந்தனர்.

வான் வழியாக எல்லையைக் கடந்த ஆயுதக்குழுவினர்

பாலத்தீன ஆயுக்குழுவைச் சேர்ந்தவர்கள் இஸ்ரேலையும் காசாவையும் பிரிக்கும் எல்லைப் பகுதியை பாராசூட்டில் அமர்ந்து கொண்டு வான்வழியாகக் கடந்துள்ளனர்.

ஜெனரேட்டர் மற்றும் பிளேடுகளால் இயக்கப்படும் அந்த பாராசூட், காசாவை சுற்றியுள்ள பகுதிக்கு முன்னேறும்போது இயக்கப்பட்டன.

ஹமாஸ் ஆயுதக்குழு

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு,

சனிக்கிழமையன்று இஸ்ரேலின் தெற்குப் பகுதிகளில் பாலத்தீனிய ஆயுதக்குழுவைச் சேர்ந்தவர்கள் ஊடுருவியதைத் தொடர்ந்து, இஸ்ரேல்-காசா எல்லையில் உள்ள வேலிப்பகுதியில் பாலத்தீனியர்கள் நுழைந்தனர்.

ஹமாஸ் இரண்டாம் உலகப்போரின் உத்தியைப் பின்பற்றியதா?

எல்லையை ஊடுருவிச் செல்லும் நோக்கத்தில், ஹமாஸின் ராணுவப் பிரிவினர் வான்வழித் தாக்குதல் நடத்த ராணுவ பாராசூட்டுகளை தொடர்ச்சியாகப் பயன்படுத்தினர்.

இரண்டாம் உலகப் போரின்போதும் ஜெர்மனி மற்றும் அதன் நேச நாடுகள் பாராசூட் மூலம் தாக்குதல் நடத்தும் பிரிவினரைத்தான் முதலில் சண்டையிட அனுப்பினார்கள்.

ஹமாஸ் ஆயுதக்குழு

பட மூலாதாரம், Getty images

படக்குறிப்பு,

பாராகிளைடர்கள் தரையில் இருந்து சராசரியாக 5,000 மீட்டர் உயரத்தில் மூன்று மணிநேரம் பறக்க முடியும்.

1987இல் நடந்த கிளைடர் தாக்குதல்

கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 7) அன்று ஹமாஸ் ஆயுதக்குழு நடத்திய தாக்குதல், பாலத்தீன விடுதலைக்கான பாப்புலர் ஃப்ரண்ட் – ஜெனரல் கமாண்ட் அமைப்பைச் சேர்ந்த பாலத்தீனர்கள் இருவர், சிரியாவை சேர்ந்த ஒருவர் துனிசியாவை சேர்ந்த ஒருவர் ஆகியோரைக் கொண்ட குழுவால் நடத்தப்பட்ட கிளைடர் ஆபரேஷனை நினைவுபடுத்துகிறது.

நவம்பர் 1987இல் இஸ்ரேலிய ராணுவ தளத்தைத் தாக்க அவர்கள் லெபனானில் இருந்து புறப்பட்டனர்.

ஹமாஸ் ஆயுதக்குழு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

நவம்பர் 26, 1987இல், வடக்கு இஸ்ரேலில் உள்ள ஒரு ராணுவ முகாமில், ஆறு இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்; ஏழு பேர் காயமடைந்தனர். இந்தத் தற்கொலைப் படைத் தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட மோட்டார் பொருத்தப்பட்ட கிளைடரை ஒரு இஸ்ரேலிய ராணுவ வீரர் பார்வையிட்டார்.

பாராசூட் மூலம் ஊடுருவிய ஹமாஸ் ஆயுதுக்குழு

மோட்டார் பொருத்தப்பட்ட பாராசூட்களை பயன்படுத்தி, திசை திருப்புவதற்குப் பயன்படும் கட்டுப்பாட்டைக்கொண்டு, போர் விமானங்களைத் தரையிலிருந்து ஏவ முடிந்தது.

இதனால், அவர்கள் மலையில் ஏறாமல், விமானத்தில் இருந்து தரையிறங்காமல் பயணிக்கலாம். இந்த இஞ்சின் பொருத்தப்பட்ட பாராசூட்களை மணிக்கு 56கி.மீ. வேகத்தில் செலுத்த முடியும்.

பாராகிளைடர்கள் தரையிலிருந்து சராசரியாக 5,000 மீட்டர் உயரத்தில் மூன்று மணிநேரம் பறக்க முடியும். பாராகிளைடிங் இணையதளங்களில் உள்ள தகவலின் படி, இந்த பாராகிளைடர்களால் 230 கிலோ எடை வரை சுமக்க முடியும்.

இஸ் அல்-தின் அல்-கஸ்ஸம்-ப்ரிகேட்ஸ் ராணுவத்தின் ஊடகப் பிரிவினர் பகிர்ந்துள்ள வீடியோக்களில், அவர்கள் தரையிலிருந்து பாராகிளைடர்களை ஏவுவதைக் காட்டுகிறார்கள். ஒவ்வொன்றிலும் ஒன்று அல்லது இரண்டு பேரால் இயக்கப்படுகின்றன.

அவர்கள் வெளியிட்டுள்ள மற்ற காட்சிகள், ஆயுதக் குழுவைச் சேர்ந்தவர்கள் இஸ்ரேலிய தளங்களில் தரையிறங்கும் முன்பாகவே வானிலிருந்து துப்பாக்கிச் சூடு நடத்துவதைக் காட்டுகின்றன.

காசாவையும் இஸ்ரேலையும் பிரிக்கும் வேலியைத் தாண்டி பாராசூட் மூலம் ஊடுருவியவர்களை ‘சகர் படை’ என அழைக்கின்றனர்.

ஹமாஸ் ஆயுதக்குழு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

ஹமாஸ் ஆயுதக்குவினர் காசா பகுதியில் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, அவர்கள் எல்லைப்பகுதியை ஊருடுவிச் செல்கின்றனர்.

இஸ்ரேலிய ராணுவம் பாராசூட்களை ஏன் கண்டுபிடிக்கவில்லை?

ஹமாஸ் ஆயுதக்குழுவின் ஊடகப்பிரிவு சார்பில் வெளியிடப்பட்ட காணொளிக் காட்சியில், அவர்கள் காசாவில் இருந்து ராக்கெட்டுகளை ஏவி, அதன் மறைவில் ஆயுதமேந்திய பாராகிளைடர்கள் மூலம் அவர்கள் பறப்பதைக் காட்டுகிறது.

சில பாராகிளைடர்கள் குறைந்த உயரத்தில் பறப்பது போன்றும், மற்றவை உயரமாகப் பறப்பது போன்று இருந்தன. காசாவை சுற்றியுள்ள வான் பகுதியில் அவை மிகவும் தெளிவாகக் காணப்பட்டன.

இஸ்ரேல் ராணுவத்தால் ஏன் இந்தத் தாக்குதலைக் கண்டுபிடிக்க முடியவில்லை என இஸ்ரேல் ஊடகங்கள் கேள்வி எழுப்பியுள்ளன.

ஆயுதக்குழுவினர் வான்வழியாக ஊடுருவியதை இஸ்ரேலிய படைகளால் ஏன் கணிக்க முடியவில்லை என்பதற்கான காரணத்தை இஸ்ரேலிய ராணுவம் இன்னும் வெளிப்படையாகக் கூறவில்லை.

குறிப்பாக, பாராசூட்கள் மிகவும் கவனிக்கத்தக்க வகையில், மக்கள் தங்கள் தொலைபேசிகளில் படம் பிடிக்கும் வகையில் இருந்தபோதும், ராணுவத்தால் ஏன் கணிக்க முடியவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.

இஸ்ரேல்-பாலத்தீனம்

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு,

இஸ்ரேல் ராணுவத்தால் ஏன் இந்தத் தாக்குதலைக் கண்டுபிடிக்க முடியவில்லை என இஸ்ரேல் ஊடகங்கள் கேள்வி எழுப்பியுள்ளன.

‘அயர்ன் டோம்’

இஸ்ரேலியர்கள் நேரடியாக மனிதர்களை ரோந்துக்கு பயன்படுத்துவதை விட தொழில்நுட்பத்தை அதிகம் நம்பியிருந்தார்களோ?

‘அயர்ன் டோம்’ மற்றும் ‘ரேடார்’ போன்ற இஸ்ரேலிய வான் பாதுகாப்பு அமைப்புகள் பாராசூட் போன்ற சிறிய பறக்கும் பொருட்களைக் கணிக்கும் வகையில் வடிவமைக்கப்படவில்லை என சில செய்தி அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ஹமாஸ் ஆயுதக்குழு

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு,

பாராசூட்கள் மிகவும் கவனிக்கத்தக்க வகையில், மக்கள் தங்கள் தொலைபேசிகளில் படம் பிடிக்கும் வகையில் இருந்தபோதும், ராணுவத்தால் ஏன் கணிக்க முடியவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.

பலமுனைத் தாக்குதல்

ஹமாஸ் 5,000 ராக்கெட்டுகளை ஏவுவதன் மூலம் தனது திடீர் தாக்குதலை ஆரம்பித்தது என்று அல்-கஸ்ஸாம் ஆயுதக்குழுவின் தளபதி முஹம்மது அல்-டீஃப் முதல் நாளில் அறிவித்தார்.

ஹமாஸ்

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு,

முதல் நாளில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் 100க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய குடிமக்கள் மற்றும் ராணுவ வீரர்களை கடத்திச் சென்றனர்.

ராக்கெட் ஏவுதலை திசைமாற்றப் பயன்படுத்தி, ஹமாஸ் ஆயுதக்குழுவைச் சேர்ந்தவர்கள் தரைவழியிலும், துப்பாக்கிப் படகுகளைப் பயன்படுத்தி கடல்வழியிலும், பாராசூட்டை பயன்படுத்தி வான்வழியிலும் ஊடுருவியுள்ளனர்.

ஊடக மற்றும் ராணுவ அறிக்கைகளின் படி, பாராசூட் தாக்குதல் மற்றும் அந்த பாராசூட்களால் வான் பாதுகாப்பு திறனை முறியடிக்கும் உத்தியே ஹமாஸ் ஆயுதக்குழுவினர் எல்லைக்குள் ஊடுருவுவதற்கு ஒரு தீர்க்கமான காரணியாக இருந்ததாகக் கூறுகிறார்கள்.

முதல் நாளில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் 100க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய குடிமக்கள் மற்றும் ராணுவ வீரர்களை கடத்திச் சென்றனர். தற்போது, “அவர்களைக் கொலை செய்துவிடுவோம்” என்று மிரட்டல் விடுத்தும் வருகின்றனர்.

ஹமாஸ் -இஸ்ரேல்
படக்குறிப்பு,

கடத்தப்பட்டவர்களை கொலை செய்துவிடுவோம் என ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *