குறைந்த விலையில் பட்டாசு! எச்சரிக்கும் சைபர் க்ரைம் போலீஸ்! மக்களே உஷாரா இருங்க…!

குறைந்த விலையில் பட்டாசு! எச்சரிக்கும் சைபர் க்ரைம் போலீஸ்! மக்களே உஷாரா இருங்க...!
குறைந்த விலையில் பட்டாசு! எச்சரிக்கும் சைபர் க்ரைம் போலீஸ்! மக்களே உஷாரா இருங்க…!

தீபாவளியை முன்னிட்டு ஆன்லைனில் குறைந்த விலைக்கு பட்டாசு தருவதாக மோசடி நடைபெற்று வரும் நிலையில், பொதுமக்கள் உஷாராக இருக்குமாறு சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை இணைய தள குற்றப்பிரிவு தலைமையகம் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் ” தீபாவளிப் பண்டிகை காலத்தில் பட்டாசுகளுக்கான தேவை அதிகரிப்பதால், இந்த அதிகரித்த தேவையை சில நேரங்களில் சைபர் குற்றவாளிகள் போலி இணையதளங்களை உருவாக்கி நம்பமுடியாத விலையில் பட்டாசுகளை வழங்குவதாக உறுதி அளித்து மோசடி செய்வதற்கு பயன்படுத்திக் கொள்கின்றனர். எனவே, பொதுமக்கள் இந்த மோசடித் திட்டத்தைப் பற்றிய விழிப்புணர்வோடு இருப்பதும், இத்தகைய மோசடிகளில் இருந்து பாதுகாத்துக் கொள்வதும் அவசியமாகும்” என குறிப்பிடப்பட்டு உள்ளது.

அதை தொடர்ந்து இந்த மோசடி எவ்வாறு நிகழ்கிறது என்றும் விரிவாக கூறப்பட்டு உள்ளது. அதில் “பாதிக்கப்பட்டவர்கள் மிக குறைந்த விலையில் பட்டாசுகள் கிடைப்பதான விளம்பரத்தை யூ-டியூபில் பார்க்கிறார்கள். மேலும் அவர்கள் வீடியோவில் குறிப்பிட்டு உள்ள வாடிக்கையாளர் சேவை எண்ணைத் தொடர்பு கொண்டு ஆர்டரைப் பற்றி விசாரிக்கிறார். அதை தொடர்ந்து கஸ்டமர் கேர் நபர் பாதிக்கப்பட்டவரின் அழைப்பிற்கு பதிலளித்து ஆர்டர் செய்த பிறகு ஸ்கிரீன் ஷாட்டைப் பகிருமாறு அவருக்குத் தெரிவிக்கிறார். பாதிக்கப்பட்டவர் வீடியோவில் குறிப்பிடப்பட்டு உள்ள ஹட்டப்ஸ் ://லுக்கிகிரேக்கர்ஸ்.கம/ என்ற இணையதளத்திற்குச் சென்று ஆர்டரைச் செய்கிறார்.

பின்னர் வாடிக்கையாளர் சேவை எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் ஸ்கிரீன் ஷாட்டையும் அனுப்புகிறார். அதன் பிறகு ஆர்டருக்கான பணம் செலுத்தப்பட்டவுடன் இணைய தளத்தில் குறிப்பிடப்பட்ட தொடர்பு எண் மற்றும் இணையதளம் அணுக முடியாததை பாதிக்கப்பட்டவர்கள் உணர்கிறார்கள். தற்போது பணத்தையும் இழந்து பட்டாசுகளை வாங்க முடியாமல் ஏமாற்றம் அடைகின்றனர்.

கடந்த 1 மாதத்தில் மட்டுமே இதுவரை மோசடி தொடர்பாக மொத்தம் 25 வழக்குகள் பதிவாகி உள்ளன. மேலும் இது போன்ற மோசடிகளில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள நடவடிக்கைகள் அவசியமானது. நீங்கள் வாங்கும் இணைய தளத்தின் சட்டபூர்வமான தன்மையை எப்போதும் சரிபார்க்கவும், வாடிக்கையாளர் மதிப்புரைகளைப் பார்க்கவும், அலுவலக முகவரி மற்றும் தொடர்பு எண்ணுக்கான லேண்ட்லைன் எண் இணையதளத்தில் உள்ளதா எனச் சரிபார்த்து பாதுகாப்பான கட்டண முறைகளைப் பயன்படுத்துவதை உறுதிசெய்யவும்.

Also Read >> பக்தர்களே தயாராகுங்கள்! ஐயப்பன் கோயில் நடை திறப்பு! எப்போது தெரியுமா? உடனே பாருங்கள்…!

மேலும் கண்களை தெரியாத இணைய தளத்தில் ஆர்டர் செய்யும் போது கேஷ் ஆன் டெலிவரி விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும். அதோடு நீங்கள் போலி இணையதளத்தில் ஏதேனும் தனிப்பட்ட தகவலைப் பகிர்ந்திருந்தால் கடவுச் சொற்களை மாற்றுதல் மற்றும் உங்கள் வங்கி கணக்குகளைக் கண்காணிப்பது போன்ற உங்கள் அடையாளத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவும். மேலும் நீங்கள் மோசடியைப் புகாரளிக்க வேண்டும் என்றால் ஸ்கிரீன்ஷாட்கள் மின்னஞ்சல், தகவல் தொடர்புகள் மற்றும் இணையதளத்தில் உள்ள தொடர்பு விவரங்கள் உட்பட உங்கள் பரிவர்த்தனைகளின் பதிவுகள் வேண்டும். எனவும் நீங்கள் இது போன்ற மோசடிக்கு ஆளாகிஇருந்தால் உடனடியாக சைபர் கிரைம் கட்டணமில்லா உதவி எண் 1930- ஐ டயல் செய்து புகாரளிக்கலாம் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் உங்களது புகாரைப் பதிவு செய்யலாம்” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த மாதிரி வேலை வாய்ப்பு நியூஸ்லாம் உடனே உங்க போன்ல பாக்க எங்களோட TELEGRAM இல்லனா WHATSAPP குரூப்ல ஜாயின் பண்ணுங்க…

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: jobstamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *