இந்தியா – தென் ஆப்ரிக்கா மோதும் போட்டியை பாக்ஸிங் டே டெஸ்ட் என்று அழைப்பது ஏன்?

இந்தியா - தென் ஆப்ரிக்கா மோதும் போட்டியை பாக்ஸிங் டே டெஸ்ட் என்று அழைப்பது ஏன்?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

காணொளிக் குறிப்பு,

பாக்ஸிங் டே டெஸ்ட் கிரிக்கெட் என்றால் என்ன? அந்தப் பெயர் வந்த வரலாறு

இந்தியா – தென் ஆப்ரிக்கா மோதும் போட்டியை ‘பாக்ஸிங் டே’ டெஸ்ட் என்று அழைப்பது ஏன்?

பாக்ஸிங் டே என்று நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? ஆனால் நீங்கள் கிரிக்கெட் ரசிகராக இருந்தால் பாக்ஸிங் டே டெஸ்ட் என்பதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கக்கூடும். ஒவ்வொரு டிசம்பர் 26ஆம் தேதியும் ‘பாக்ஸிங் டே’ கடைப்பிடிக்கப்படுகிறது.

இது ஏதோ பாக்ஸிங் குறித்த தினமா? என நீங்கள் யோசிக்கலாம்… அதுதான் இல்லை.

பிரிட்டனில் 1800களில் மகாராணி விக்டோரியா அரியணையில் இருந்தபோது இந்த ‘பாக்ஸிங் டே’ உருவானது.

இந்த தினத்தில் செல்வந்தர்கள், ஏழைகளுக்கு பரிசுகளை பெட்டிகளில் வைத்து வழங்குவர்.

இந்த தினத்தில் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்படும். மேலும் அவர்களின் எஜமானர்களிடமிருந்து அவர்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசுப் பெட்டி கிடைக்கும்.

பணியாளர்கள் இந்த பரிசுப் பெட்டியை குடும்பத்தினரிடம் கொடுப்பதற்காக வீடுகளுக்கு செல்வர்.

ஹங்கேரி, ஜெர்மனி, போலாந்து, நெதர்லாந்து போன்ற சில ஐரோப்பிய நாடுகளில் இது இரண்டாம் கிறிஸ்துமஸ் தினமாக கொண்டாடப்படுகிறது.

இந்த பாக்ஸிங் டே உருவானதில் தேவாலயங்களுக்கும் பங்குண்டு. வருடம் முழுவதும் தேவாலயத்திற்கு வருபவர்களிடம் பணம் பெற்று கிறிஸ்துமஸ் தினத்தின் அடுத்த நாளில் ஏழைகளுக்கு தானமாக பரிசுகள் வழங்கப்படும்.

இந்த பணம் அதற்கான பெட்டியில் சேமிக்கப்படும். இப்போது பெட்டிகள் இல்லாமல் போனாலும், கிறிஸ்துமஸ் தினத்திற்கு முன்னதாக ஊழியர்களுக்கு பணம் வழங்குவதை சிலர் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

பாக்ஸிங் டேவில் கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகள் ஆண்டுதோறும் நடைபெற்று வருகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் இந்த தினத்தில் நடத்தப்படும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் ’பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி’ என அழைக்கப்படும். இந்த போட்டிகள் குறிப்பாக ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் மைதானத்தில் நடைபெறும். அந்த வகையில் இன்று தொடங்கிய போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் பாகிஸ்தான் அணி மோதுகிறது.

தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து போன்ற காமன்வெல்த் நாடுகளிலும் பாக்சிங் டே டெஸ்ட் போட்டி நடத்தப்படும்.

அந்த வகையில் தென் ஆப்ரிக்காவில் தொடங்கியுள்ள பாக்சிங் டே டெஸ்டில் தென் ஆப்ரிக்கா – இந்தியா அணிகள் மோதுகின்றன.

முழு விவரம் காணொளியில்…

பாக்ஸிங் டே டெஸ்ட் கிரிக்கெட்

பட மூலாதாரம், Getty Images

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *