ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
கங்கை கரையில் உள்ள ஹரித்வார், இந்துக்களின் புனிதத் தலமாகப் பார்க்கப்படுகிறது.
அன்பின் ஆன்மிக மாநாடு: இந்துவாக இருப்பது என்றால் என்ன? – பகுதி1
இந்துவாக இருப்பது என்றால் என்ன? இன்றைய காலகட்டத்தில் எத்தகைய சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது? இந்துவாக இருப்பது என்பதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறதா?
இந்தக் கேள்விகளை எதிர்கொள்கிறது பிபிசியின் இந்தத் தொடர். அதன் முதல் பாகம் இது.
கங்கை கரையில் உள்ள ஹரித்வார், இந்துக்களின் புனிதத் தலமாகப் பார்க்கப்படுகிறது.
லட்சக்கணக்கான பக்தர்கள், அர்ச்சகர்கள், மற்றும் சன்யாசிகள் இங்கு திரள்கின்றனர். இதனை மீட்பு மற்றும் அமைதிக்கான பாதை என்று அவர்கள் கூறுகின்றனர்.
ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இந்த இடத்தில் ‘தர்ம் சன்சத்’ என்ற பெயரில் நடந்த ஆன்மீக மாநாட்டில், இந்து மதத்தின் பெயரால் வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சுக்கள் இடம்பெற்றன.
அது தொடர்பாக சில மதத் தலைவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இப்போது மற்றொரு மதகுரு மற்றொரு ‘தர்ம் சன்சத்தை’ ஏற்பாடு செய்துள்ளார். அவர் உள்ளிட்ட மதகுருக்கள், மதத்தின் உள்ளார்ந்த அன்பின் உணர்வைப் பற்றி இந்த காணொளி பேசுகிறார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்
